04-09-2020 - தினப்பலன்:இந்த ராசிகளுக்கு இன்று அமோகமான நாள் !!

04-09-2020 - தினப்பலன்:இந்த ராசிகளுக்கு இன்று அமோகமான நாள் !!

04-09-2020 - தினப்பலன்:இந்த ராசிகளுக்கு இன்று அமோகமான நாள் !!
X

கிரகநிலை:
ராசியில் செவ்வாய் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராஹூ - சுக ஸ்தானத்தில் சுக்ரன்   - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன் - அஷ்டம ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் குரு (வ), சனி (வ) - அயன சயன போக ஸ்தானத்தில் சந்திரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.  
பலன்:
இன்று வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்கு செல்லலாமா என்று கூட தோன்றலாம். குடும்பத்தில் அமைதி குறையலாம். கணவன், மனைவிக்கிடையே திடீர் மனஸ்தாபம் ஏற்படலாம். பிள்ளைகள் கல்விக்கான செலவு அதிகரிக்கும். அத்துடன் தேவையானவற்றையும் வாங்கி தருவீர்கள். பெண்களுக்கு அடுத்தவர்கள் பொறுப்புகளை ஏற்காமல் தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத செலவுகள் வரலாம். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். கலைத்துறையினருக்கு வெளிநாட்டு வாய்ப்புகள் கை கூடி வரும். அதிகமான ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டி வரும். அரசியல்துறையினர் எதிர்பார்த்த பதவிகளை அடைவீர்கள். மாணவர்களுக்கு மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது அவசியம். வீண் விவகாரங்களை விட்டு விலகுவது நல்லது.
 

கிரகநிலை:
ராசியில்  ராஹூ - தைரிய ஸ்தானத்தில் சுக்ரன் - சுக ஸ்தானத்தில்  சூர்யன் - பஞ்சம  ஸ்தானத்தில் புதன் - களத்திர ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் குரு (வ), சனி (வ) - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் -  விரைய ஸ்தானத்தில் செவ்வாய்   என கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்:
இன்று நீங்கள் எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். உங்களது பேச்சை மற்றவர்கள் சரியாக புரிந்து கொள்வார்கள். எந்த ஒரு காரியமும் இழுபறியாக இருந்து முடிவில் சாதகமான பலன்தரும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். லாபம் அதிகாரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு உண்டாகும். வேலைப்பளு குறையும். திடீர் நெருக்கடிகள் ஏற்படலாம் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். திருமண முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன்  - தைரிய ஸ்தானத்தில்  சூர்யன் - சுக ஸ்தானத்தில் புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - களத்திர ஸ்தானத்தில் குரு (வ), சனி (வ) - தொழில் ஸ்தானத்தில் சந்திரன் - லாப ஸ்தானத்தில்  செவ்வாய் - அயன சயன போக ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்:
இன்று மனதில் துணிச்சல் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு தொழில் தொடர்பான நெருக்கடிகளை சந்திக்க வேண்டி வரும். அரசியல்துறையினர் அடுத்தவர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். நீண்ட தூர தகவல்கள் நல்லவையாக இருக்கும். எதிலும் நிதானம் தேவை. மாணவர்களுக்கு பாடங்களை படிப்பது வேகம் பெறும். கல்வியில் வெற்றி பெறுவீர்கள். காரியங்களில் இருந்த தாமதம் நீங்கும். அடுத்தவரை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காமல் இருப்பது நன்மை தரும். விருப்பத்திற்கு மாறாக சில காரியங்கள் நடக்கலாம். எதையும் திட்டமிட்டு செய்வது நல்லது.

கிரகநிலை:
ராசியில் சுக்ரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில்  சூர்யன் - தைரிய  ஸ்தானத்தில் புதன் - பஞ்சம ஸ்தானத்தில் கேது - ரண, ருண ஸ்தானத்தில்  குரு (வ), சனி (வ) - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் - தொழில் ஸ்தானத்தில்  செவ்வாய் - லாப ஸ்தானத்தில்  ராஹூ  என கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்:
இன்று குடும்பத்தில் இருப்பவர்களால் சந்தோஷமான மனநிலை உருவாகலாம். மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் உங்களுக்கு உதவி புரிவார்கள். மனதில் நிலையான எண்ணம் இருக்காது. தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணி சுமையை ஏற்க வேண்டி இருக்கும். முக்கிய பொறுப்பு கிடைக்கலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு மனத்துணிவு அதிகரிக்கும்.

கிரகநிலை:
ராசியில் சூர்யன் - தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில் புதன் - சுகஸ்தானத்தில் கேது - பஞ்சம ஸ்தானத்தில்  குரு (வ), சனி (வ) - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில்  செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில்  ராஹூ - விரைய ஸ்தானத்தில் சுக்ரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன
பலன்:
இன்று காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். அரசியல்துறையினர் இடமாற்றம், பதவி இறக்கம் ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். இருப்பினும் நற்பெயர் கிடைக்கும். மாணவர்களுக்கு  கல்விக்காக செலவு உண்டாகும். கல்வியில் வெற்றி பெறு வோம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் வேகம் காட்டுவீர்கள். புத்திசாதூரியத்தால் எந்த தடைகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். எந்த ஒரு பிரச்சனையும் துணிச்சலுடன் எதிர்கொள்வீர்கள். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும்.

கிரகநிலை:
ராசியில் புதன் - தைரிய ஸ்தானத்தில் கேது - சுக  ஸ்தானத்தில்  குரு (வ), சனி (வ) - களத்திர ஸ்தானத்தில் சந்திரன் -  அஷ்டம ஸ்தானத்தில்  செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில்  ராஹூ - லாப ஸ்தானத்தில் சுக்ரன்  - விரைய ஸ்தானத்தில்  சூர்யன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்:
இன்று உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். தொழில் வியாபார சிக்கல்கள் நீங்கி நன்கு நடைபெறும். தொழில் வியாபாரத்தை  விரிவாக்கம் செய்ய முயற்சி மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்கு புதிய பதவி கூடுதல் பொறுப்புகள் கிடைக்கலாம். கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். பெண்களுக்கு திறமையான பேச்சின் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். கலைத்துறையினருக்கு கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். அரசியல்துறையினர் கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது.  

கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - தைரிய ஸ்தானத்தில் குரு (வ), சனி (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன் -  களத்திர ஸ்தானத்தில்  செவ்வாய் -  அஷ்டம ஸ்தானத்தில் ராஹூ - தொழில் ஸ்தானத்தில் சுக்ரன்  - லாப ஸ்தானத்தில்  சூர்யன்   - அயன சயன போக  ஸ்தானத்தில் புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  
பலன்:
இன்று உங்களுக்கு மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய முழு முயற்சியுடன் படிப்பீர்கள். சக மாணவர்கள் மத்தியில் மதிப்பு உயரும். கலைத்துறையினருக்கு கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. பயணங்கள் நெல்ல நேரிடலாம். மனதிருப்தியுடன் செயலாற்றுவீர்கள். புத்திசாதூரியம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் மதிப்பு கூடும். அரசியல் துறையினருக்கு தங்கள் இருப்பை மேலிடத்தில் சொல்வதற்கு ஏற்ற காலகட்டம். புதிய உக்திகளைக் கையாண்டு அசத்துவீர்கள்.

கிரகநிலை:
ராசியில் கேது - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் குரு (வ), சனி (வ) - பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில்  செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் ராஹு - பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன்  - தொழில் ஸ்தானத்தில்  சூர்யன் - லாப   ஸ்தானத்தில் புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்:
இன்று முன்னேற்றம் கிடைக்கும். தாங்கள் மேன்மையடைந்திட புதிய வாய்ப்புகள் வந்து சேரும். பணிகளில் இடையூறுகள் ஏற்படலாம். பழைய பாக்கிகள் வசூலில் தாமதமான நிலை காணப்படும். வேலை சுமை அதிகரிப்பதுடன் அலைச்சலும் அதனால் சோர்வும் உண்டாகும். சொன்ன சொல்லை எப்பாடுபட்டாவது காப்பாற்றுவீர்கள். ஒரு சில பணி காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடலாம். மாணவர்களுக்கு கல்வியில்  மந்தமான நிலை மாற கூடுதல் கவனத்துடன்  பாடங்களை படிப்பது நன்மை தரும். செல்வநிலை உயரும். பலவகையிலும் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த வேதனையும் சோதனையும் மாறும்.

கிரகநிலை:
ராசியில்  குரு (வ), சனி (வ) - சுக ஸ்தானத்தில் சந்திரன் - பஞ்சம ஸ்தானத்தில்  செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில்  ராஹு - அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரன்  - பாக்கிய ஸ்தானத்தில்  சூர்யன் -   தொழில்  ஸ்தானத்தில் புதன் - அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்:
இன்று உடல் ஆரோக்கியம் வலுப்பெறும். இதுவரை தொந்தரவு கொடுத்துவந்த நோய் விலகும். அதனால் ஏற்பட்ட மனபாரம் குறையும். வரக்கூடிய உபரி வருவாயால் கடன் அடைபடும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.  அரசாங்க காரியங்களில் இருந்த தடை நீங்கும். புத்தி சாதூரியம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் உயர்வுகள் உண்டாகும். பணியாளர்கள் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். அனுபவப் பூர்வமான அறிவு கைகொடுக்கும். எல்லா நன்மைகளையும் தடையின்றி அடைவீர்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். எதிர்பார்த்தபடி வரவுகள் வந்துசேரும்.
 

கிரகநிலை:
தைரிய ஸ்தானத்தில் சந்திரன் - சுக ஸ்தானத்தில்  செவ்வாய் -  பஞ்சம  ஸ்தானத்தில்  ராஹூ - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன்  - அஷ்டம ஸ்தானத்தில்  சூர்யன் -  பாக்கிய  ஸ்தானத்தில் புதன் - லாப ஸ்தானத்தில் கேது - அயன, சயன,  போக ஸ்தானத்தில் குரு (வ), சனி (வ) என கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்:
இன்று கலைத்துறையினருக்கு திறமைக்கேற்ற வாய்ப்புகள் வந்து சேரும். இதனால் உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றமான பாதையில் செல்வீர்கள். இதுவரை நிலுவையிலிருந்த பணத்தொகைகளும் கைக்கு கிடைக்கும். உங்கள் வெளியூர் பயணங்கள் யாவும் சிறப்பாக அமையும். அரசியல் துறையினருக்கு பாராட்டு கிடைக்கும். மனகவலை ஏற்படும். உடல்சோர்வு உண்டாகும். ஆன்மீக நாட்டமும், மன தைரியமும் உங்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும். தொழில் முன்னேற்றம் காண புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்க கூடிய சூழ்நிலை காணப்படும்.

கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - தைரிய ஸ்தானத்தில்  செவ்வாய் -  சுக ஸ்தானத்தில்  ராஹூ - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்ரன்  - களத்திர ஸ்தானத்தில்  சூர்யன் - அஷ்டம  ஸ்தானத்தில் புதன் - தொழில் ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் குரு (வ), சனி (வ) என கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்:
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் எளிதாக பணிகளை செய்து முடிப்பார்கள். செயல்திறன் அதிகரிக்கும். உங்களுக்கான வேலைகளை சரியான நேரத்தில் செய்து முடித்து பாராட்டுகள் பெறுவீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்கள் சேரும். வியாபாரம் பெருகும். போட்டியாளர்கள் விலகிச்செல்வார்கள். கணவன்- மனைவி ஒற்றுமை சுமுகமாக இருக்கும். மனைவி வழியில் வரவேண்டிய சொத்துகள் கிடைக்கும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவது  நன்மையை தரும்.  பிள்ளைகள் எதிர்காலம் குறித்து தேவையான பணிகளை கவனிப்பீர்கள். புத்திசாதூரியம் அதிகரிக்கும்.

கிரகநிலை:
ராசியில் சந்திரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில்  செவ்வாய்  - தைரிய ஸ்தானத்தில்  ராஹூ - பஞ்சம ஸ்தானத்தில் சுக்ரன்  - ரண ருண ரோக ஸ்தானத்தில்  சூர்யன் - களத்திர  ஸ்தானத்தில் புதன் - பாக்கிய ஸ்தானத்தில் கேது - தொழில்  ஸ்தானத்தில் குரு (வ), சனி (வ) என கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்:
இன்று பயணங்களின் போது கவனம் தேவை. வேலைக்கு செல்லும் பெண்கள் தங்கள் பொருட்களை பத்திரமாக வைத்திருப்பது நல்லது. புதிய ஒப்பந்தங்கள் கைகொடுக்கும். தொழிலதிபர்கள் பங்குதாரர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். திடீர் கோபங்கள் உண்டாகலாம். நிதானமாக இருப்பது நல்லது. புத்திசாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள். எந்த ஒரு விஷயத்தையும் தள்ளிப் போடாமல் உடனே முடிவு காண்பது நல்லது. தெளிவான  சிந்தனை தோன்றும். எந்த காரியத்தையும் செய்யும் முன் ஆலோசனை செய்து அதில் ஈடுபட்டு வெற்றி  காண்பீர்கள். வியாபாரிகள் எந்தக் கொள்முதலையும் தயக்கமின்றிச் செய்யலாம்.  உங்களை ஒதுக்கியவர்களே உங்களைத் தேடிவருவார்கள்.

Next Story
Share it