எந்த ஒரு ஆவணங்களோ அல்லது சாட்சிகளோ நிரூபிக்கப்படாத காரணத்தினால் கல்லூரி மாணவி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் விடுதலை..!!

எந்த ஒரு ஆவணங்களோ அல்லது சாட்சிகளோ நிரூபிக்கப்படாத காரணத்தினால் கல்லூரி மாணவி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் விடுதலை..!!
X

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகள் திலகவதி (19). இவர் விருத்தாசலம் அருகே உள்ள தனியார் கல்லூரியில், பிஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் வீட்டில் தனியாக இருந்த திலகவதி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

இது குறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீசார் விசாரணையில், கடலூர் மாவட்டம் பேரளையூரை சேர்ந்த ஆகாஷ் (19), கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார். திலகவதியை, ஆகாஷ் ஒரு தலையாக காதலித்ததாகவும், காதலை ஏற்க மறுத்ததால் அவர் திலகவதியை கத்தியால் குத்தி கொலை செய்ததாகவும் ஆகாஷை போலீசார் கைது செய்தனர்.


இதனிடையே திலகவதியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 5 நாட்கள் வரை போராட்டத்தில் ஈடுபட்டனர். விருத்தாச்சலத்தில் பல மணி நேரம் சாலை மறியலும் நடைபெற்றது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அப்போது கடலூர் மாவட்டத்தில் பெரும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஆகாஷின் தந்தை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையானது கடலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. ஆகாஷ் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் திலகவதி உறவினர்களே அவரை கொலை செய்து விட்டதாக ஆகாஷ் தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது.


இந்த வழக்கு தொடர்பாக மகளிர் நீதிமன்ற நீதிபதி உத்தமராஜா தீர்ப்பு வழங்கினார். அதில் இந்த வழக்கில் குற்றப் பத்திரிகையில் உள்ளது போல எந்த ஒரு ஆவணங்களோ அல்லது சாட்சிகளோ நிரூபிக்கப்படாத காரணத்தினால் சந்தேகத்திற்கு இடம் இன்றி ஆகாஷ் குற்றவாளி அல்ல என தெரிய வருவதாகவும் அதனால் அவரை விடுவிப்பதாகவும் தெரிவித்தார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்கில் குற்றம் சாற்றப்பட்டவர் விடுவிக்கப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.Next Story
Share it