{"vars":{"id": "106785:4629"}}

#JUST IN: தமிழகத்தில் நாளை நடைபெறவிருந்த முக்கிய தேர்வுகள் ஒத்திவைப்பு..!!

 

மாண்டஸ் புயல் காரைக்காலில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே சுமார் 420 கிமீ தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 520 கிமீ தொலைவிலும் உள்ளது. கனமழை பெய்யும் பகுதிகளுக்கு 6 தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்களும் அனுப்பப்பட்டு உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல தமிழகத்தில் நாளை மொத்தம் 16 மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், வேலூர், திருப்பத்தூரில்,அரியலூர், தஞ்சாவூர்,பெரம்பலூர்,திருவாரூர்.மயிலாடுதுறை,கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஊரகத் திறனாய்வு தேர்வு தள்ளிவைக்கப்படுவதாக தேர்வு துறை இயக்குநர் அறிவித்துள்ளார். வருகிற 10-ந் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த தேர்வு வருகிற 17-ந் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தேர்வு துறை அறிவித்துள்ளது.

நாளை நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக பருவமுறை தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் நடைபெறும் நாள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணாமலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

நாளை (09.12.2022) மற்றும் நாளை மறுநாள் (10.12.2022) நடைபெறவிருந்த வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புயல் கனமழை எச்சரிக்கை காரணமாக திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படது.

நாளை (09.12.2022) நடைபெற இருந்த பாலிடெக்னிக் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. டிசம்பர் 16-ம் தேதி பாலிடெக்னிக் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்தது.