{"vars":{"id": "106785:4629"}}

#JUST IN: நாளை 18 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு - முக்கிய தேர்வுகள் ஒத்திவைப்பு..!!

 

மாண்டஸ் புயல் நாளை நள்ளிரவு புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே புயல் கரையை கடக்கும். நாளை காலை வரை தீவிர புயலாகவே நகர்ந்து பிறகு சற்றே வலுக்குறைந்து மாண்டஸ் புயல் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.மேலும் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் ,பொதுமக்கள் கடற்கரைக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என தமிழக அரசுஉத்தரவிட்டுள்ளது.

  • புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், வேலூர், திருப்பத்தூரில்,அரியலூர், தஞ்சாவூர்,பெரம்பலூர்,திருவாரூர்.மயிலாடுதுறை,கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை,சேலம்,நாமக்கல் மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
  • மேலும், ஊரகத் திறனாய்வு தேர்வு தள்ளிவைக்கப்படுவதாக தேர்வு துறை இயக்குநர் அறிவித்துள்ளார். வருகிற 10-ந் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த தேர்வு வருகிற 17-ந் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தேர்வு துறை அறிவித்துள்ளது.
  • நாளை நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக பருவமுறை தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் நடைபெறும் நாள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணாமலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
  • நாளை (09.12.2022) மற்றும் நாளை மறுநாள் (10.12.2022) நடைபெறவிருந்த வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புயல் கனமழை எச்சரிக்கை காரணமாக திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படது.
  • சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்கு நாளை (09.12.2022) விடுமுறை அறிவிக்கப்பட்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் வெளியிடப்படும் என அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.