{"vars":{"id": "106785:4629"}}

மாண்டஸ் புயல் எதிரொலி : தமிழகத்தில் இன்று நடைபெறவிருந்த முக்கிய தேர்வுகள் ஒத்திவைப்பு..!!

 

மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் 24 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, கடலூர், திருவாரூர், தஞ்சை, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, சேலம், நாமக்கல், தருமபுரி, நாகப்பட்டினம், திருவண்ணாமலை, திருச்சி, திருப்பத்தூர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று(டிச.9) விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.





மேலும் இன்று நடைபெறவிருந்த செமிஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இன்று(09.12.2022) நடைபெற இருந்த பாலிடெக்னிக் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. டிசம்பர் 16-ம் தேதி பாலிடெக்னிக் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்தது.

இன்று (09.12.2022) மற்றும் நாளை (10.12.2022) நடைபெறவிருந்த வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புயல் கனமழை எச்சரிக்கை காரணமாக திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படது.

இன்று நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக பருவமுறை தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் நடைபெறும் நாள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணாமலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

ஊரகத் திறனாய்வு தேர்வு தள்ளிவைக்கப்படுவதாக தேர்வு துறை இயக்குநர் அறிவித்துள்ளார். நாளை 10-ந் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த தேர்வு வருகிற 17-ந் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தேர்வு துறை அறிவித்துள்ளது.

இன்று (09.12.2022) நடைபெற இருந்த அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அறிவித்துள்ளார்.

இன்று(09.12.2022) நடைபெற இருந்த பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் வெளியிடப்படும் என பாரதிதாசன் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இன்று(09.12.2022) நடைபெற இருந்த எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் வெளியிடப்படும் என எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்கு இன்று (09.12.2022) விடுமுறை அறிவிக்கப்பட்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் வெளியிடப்படும் என அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.