உதவி ஆய்வாளரைத் தாக்கிய இளைஞர்கள்!! தொடரும் மாவுக்கட்டு ட்ரீட்மெண்ட்!!

போதையில் போலீஸை தாக்கிய இளைஞர்கள்.. பாத்ரூமில் வழுக்கி விழுந்து எலும்பு முறிவு!!
 | 

உதவி ஆய்வாளரைத் தாக்கிய இளைஞர்கள்!! தொடரும் மாவுக்கட்டு ட்ரீட்மெண்ட்!!

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி பேருந்து நிறுத்தம் அருகே உள்ள ஒரு பேக்கரியில் ஜனவரி மாதம் சிகரெட் கேட்ட விவகாரத்தில் இரண்டு பேருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அப்பகுதியில் தேர்தல் பாதுகாப்பு பணியில் உச்சிபுளி காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் ஜெயபாண்டி, நந்தகுமார் ஆகியோர் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அவர்கள் தகராறில் ஈடுபட்டவர்களை பிடித்து விசாரிக்க முயன்றனர். ஆனால் போதையில் இருந்த இரு நபர்களும் உதவி ஆய்வாளர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். மேலும் போலீசாரின் இருசக்கர வாகனங்களையும் சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

உதவி ஆய்வாளரைத் தாக்கிய இளைஞர்கள்!! தொடரும் மாவுக்கட்டு ட்ரீட்மெண்ட்!!

இந்த சம்பவத்தில் போலீசாரின் தலை மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் தாக்குதல் நடத்திய உச்சிப்புளி அருகே வெள்ளமாசிவலசை பகுதியை சேர்ந்த முக்கிய குற்றவாளி கணேசனை(25) போலீசார் கைது செய்தனர். அவர் காவல் நிலையத்தின் பாத்ரூமில் வழுக்கி விழுந்து மாவு கட்டு போட்டுள்ளார்.

உதவி ஆய்வாளரைத் தாக்கிய இளைஞர்கள்!! தொடரும் மாவுக்கட்டு ட்ரீட்மெண்ட்!!

தற்போது அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தப்பியோடிய மேலும் சிலரை போலீஸார் தொடர்ந்து தேடிவருகின்றனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டதன் பேரில் கணேசன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP