கள்ளக்காதலியை கொன்று நாடகம் ஆடிய இளைஞர்.. திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் ஆத்திரம்

கள்ளக்காதலியை கொடூரமாக கொன்று நாடகம் ஆடிய இளைஞர்.. திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் ஆத்திரம்
 | 

கள்ளக்காதலியை கொன்று நாடகம் ஆடிய இளைஞர்.. திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் ஆத்திரம்

கள்ளக்காதலியை கொடூரமாக கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட நிப்பெட் கம்பெனி உரிமையாளரும் அவரது கூட்டாளியும் போலீசில் சிக்கினார். கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் கரடிஅள்ளி அடுத்த சுருளி அள்ளியை சேந்தவர் மாதேஸ் (35) லாரி டிரைவர். இவரது மனைவி நதியா (29). இவர், சப்பாணிபட்டியில் உள்ள நிப்பெட் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். மாதேஸ் லாரியில் சரக்கு ஏற்றிக் கொண்டு ஆந்திராவுக்கு சென்ற நிலையில், வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய நதியா கடந்த 13ஆம் தேதி இரவு வீட்டில் தூக்கில் தொடங்கிய நிலையில் சடலமாக கிடந்தார். இது தொடர்பாக தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்தனர். முதற்கட்ட விசாரணையில் சக்திவேல் (30) என்பவர் நதியா இறப்பிற்கு காரணமாக இருக்கக்கூடும் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

கள்ளக்காதலியை கொன்று நாடகம் ஆடிய இளைஞர்.. திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் ஆத்திரம்

இதனிடையே, நதியாவின் பிரேத பரிசோதனை அறிக்கையும் போலீசாருக்கு கிடைத்தது. அதில் நதியா தற்கொலை செய்யவில்லை, கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், நதியாவை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். மேலும் அவர் அளித்த வாக்குமூலத்தில், தான் நடத்தி வரும் நிப்பெட் நிறுவனத்தில் நதியா ஊழியராக வேலை பார்த்து வந்தார். அவருக்கும் எனக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.நதியாவின் கணவர் லாரி டிரைவர் என்பதால் வெளியூர்களுக்கு சென்றவுடன், நான் இரவு நேரத்தில் அவர் வீட்டுக்கு சென்று உல்லாசமாக இருப்பேன்.

கள்ளக்காதலியை கொன்று நாடகம் ஆடிய இளைஞர்.. திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் ஆத்திரம்

இந்நிலையில் எனக்கு வீட்டில் கடந்த 3 கால மாதமாக பெண் பார்த்துக் கொண்டிருந்தனர். இது பற்றி நதியாவுக்கு தெரியவந்தது. இதனால் 2 பேருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. என்னிடம் வேறு யாரையும் திருமணம் செய்யக்கூடாது என நதியா கூறினார். இந்நிலையில் சம்பவத்தன்று இந்த விவகாரம் தொடர்பாக எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரத்தில் அவரை அடித்து உதைத்து தலையணையால் அமுக்கியும் கொலை செய்தேன்.

கள்ளக்காதலியை கொன்று நாடகம் ஆடிய இளைஞர்.. திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் ஆத்திரம்

பின்னர் எனது நண்பர் பாலமுருகனை வரவழைத்து இருவரும் நதியாவின் உடலை தூக்கில் தொங்க விட்டோம் என சக்திவேல் போலீசாரிடம் கூறினார். இதனை தொடர்ந்து பாலமுருகனையும் கைது செய்த போலீசார்  இருவரையும் சேலம் சிறையில் அடைத்தனர்.  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP