தலைக்கேறிய போதையால் தள்ளாடிய இளம்பெண்கள்.. போலீஸார் செய்த காரியம்

தலைக்கேறிய போதையால் தள்ளாடிய இளம்பெண்கள்.. போலீஸார் செய்த காரியம்
 | 

போதையில் தள்ளாடிய 20 பெண்கள்! களை கட்டும் நள்ளிரவு பார்ட்டிகள்!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஜுப்ளி ஹில்ஸ் சாலை முக்கிய சாலையாக திகழ்கிறது. இங்குள்ள தனியார் ஹோட்டலில் 'பப்' நிகழ்ச்சியில் இளம்பெண்கள், இளைஞர்கள் ஏராளமானோர் திரண்டு அதிகளவில் பணம் செலவழித்து போதையில் திகைத்து இருப்பது வழக்கம். மது மட்டுமல்லாது, பல்வேறு போதைப் பொருள்களும் இந்த பப்பில் சரளமாகப் புழங்கியுள்ளன. குறிப்பாக வார இறுதி நாட்களில் ஏராளமான பெண்கள் இந்த தனியார் ஹோட்டலுக்கு வந்து பப்பில் கலந்து கொள்வது வழக்கம்.

போதையில் தள்ளாடிய 20 பெண்கள்! களை கட்டும் நள்ளிரவு பார்ட்டிகள்!

போதைக்கு அடிமையான அந்த இளம்பெண்கள் மது மட்டுமின்றி பல்வேறு போதைப் பொருட்களுக்கும் அடிமையாகி இரவு முழுவதும் சுய நினைவின்றி இருந்துள்ளனர். இந்த நிலையில்தான் தனியார் ஹோட்டலில் நடப்பவற்றை ஹைதராபாத் காவல்துறையினர் ரகசியமாகக் கண்காணித்து வந்தனர். அந்த ஹோட்டலுக்குள் நள்ளிரவு திடீரென நுழைந்த காவல்துறையினர் அங்கே சோதனையிட்டுள்ளனர்.

போதையில் தள்ளாடிய 20 பெண்கள்! களை கட்டும் நள்ளிரவு பார்ட்டிகள்!

அப்போது பப்பில் 20 க்கும் மேற்பட்ட இளம் பெண்கள் சுய நினைவின்றி மதுபோதையில் தள்ளாடிக் கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அந்த இளம் பெண்களை மடக்கிப் பிடித்த காவல்துறையினர் விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்துச் சென்றனர். அந்த ஹோட்டலுக்குள் போதைப் பொருட்கள் எப்படி வந்தன என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவான தனியார் ஹோட்டல் உரிமையாளர் பிரசாத் என்பவரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP