இளம்பெண்ணிடம் பேருந்தில் சில்மிஷம்!! அதிர்ச்சியளிக்கும் வீடியோ!!

பெங்களூருவில் பேருந்தில் பயணம் செய்த பெண் பயணியிடம் கண்டக்டர் சில்மிஷத்தில் ஈடுபட்ட வீடியோ முகநூலில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூருவில் இருந்து மங்களூரு மாவட்டம் புத்தூரை நோக்கி ஏராளமான பயணிகளுடன் அரசு பேருந்து அரசு வேகத்தில் சென்றுகொண்டிருந்தது.
 | 

அந்த பேருந்தில் இளம் பெண் ஒருவர் பயணித்தார். அனைவருக்கும் டிக்கெட் கொடுத்துவிட்டு கண்டக்டர் இளம்பெண் அருகே வந்து அமர்ந்துள்ளார். சிறிது நேரம் அமைதியாக இருந்த கண்டக்டர், பின்னர் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதை அந்த பெண் தடுக்க முயற்சித்தும், அதை கண்டுக்கொல்லாமல் வேலையை தொடர்ந்தார். மேலும் பெண்ணின் கையை தள்ளிவிட்டு, மீண்டும் பாலியல் சில்மிஷம் செய்தார்.

இளம்பெண்ணிடம் பேருந்தில் சில்மிஷம்!! அதிர்ச்சியளிக்கும் வீடியோ!!
இதை தாங்கிக் கொள்ள முடியாத அந்த இளம்பெண், கண்டக்டரின் சேட்டையை  தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இதை கண்டக்டர் கவனிக்கவில்லை. ஆதாரம் கிடைத்தப்பின்னர் சிறிது தூரத்தில் பேருந்தை நிறுத்தக்கூறிய பெண், கண்டக்டரிடம்  தகராறில் ஈடுபட்டார். சில்மிஷம் செய்ததாக பெண் தன் மீது கூறிய குற்றச்சாட்டை கண்டக்டர் மறுத்து வாக்குவாதம் செய்தார்.

இறுதியாக அந்த பெண் தனது செல்போனில் பதிவு செய்து வைத்திருந்த வீடியோவை காண்பித்தபோது, கண்டக்டர் சிக்கினார். பின்னர் அந்த வீடியோவை அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். பின்னர் இது தொடர்பாக கர்நாடகா போக்குவரத்து துறை அளித்த புகாரில் சம்பந்தப்பட்ட கண்டக்டர் சிசுஹரி சாலூர் மீது போலீசார் செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP