இளம் பெண்ணின் நிர்வாண வீடியோ! மயக்க மருந்து கொடுத்த ஒளிப்பதிவாளர்!

பொள்ளாச்சி சம்பவத்தைப் போன்று கும்பகோணம் அருகே நிகழ்ந்த பாலியல் பலாத்கார சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 | 

இளம் பெண்ணின் நிர்வாண வீடியோ!  மயக்க மருந்து கொடுத்த ஒளிப்பதிவாளர்!

பொள்ளாச்சி சம்பவத்தைப் போன்று கும்பகோணம் அருகே நிகழ்ந்த பாலியல் பலாத்கார சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கும்பகோணம் அருகே குருவாடியைச் சேர்ந்த 23 வயது இளம் பெண், ஒரு யூ டியூப் சேனலில் கும்பகோணம் பகுதி செய்தியாளராக பணியாற்றி வந்தார். இவருடன் ஒளிப்பதிவாளராக இருந்தவர் பரங்கிப்பேட்டையில் உள்ள சாமியார்பேட்டையைச் சேர்ந்த நவீன்குமார். இருவரும் தெரிகிறது. இந்நிலையில் தாம் இருவரும் இணைந்து முதலீடு செய்து தனியாக தொழில் தொடங்கலாம் என்றும் அதற்காக 2 லட்ச ரூபாய் கொடுக்குமாறும் நவீன்குமார் அந்த இளம்பெண்ணிடம் கேட்டுள்ளார்.

நவீனை நம்பி அந்த இளம்பெண்ணும் ரூ2 லட்சத்தை நவீனிடம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே நவீன் குமார் கோவையில் உள்ள நிறுவனத்திற்கு வேலைக்கு சென்றதாகவும், அங்கு தனக்கு விபத்து நிகழ்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் இளம்பெண்ணிடம் கூறியுள்ளார். இதனை நம்பிய அந்த இளம் பெண் கோவைக்கு சென்று நவீனை சந்தித்துள்ளார். அப்போது நவீன் குமார் விடுதி ஒன்றில் எடுத்திருந்த அறைக்கு வருமாறு இளம்பெண்ணை அழைத்துள்ளார். அந்த இளம்பெண்ணும் அந்த விடுதி அறைக்கு சென்றுள்ளார்.

இளம்பெண்ணை அறையில் தங்க வைத்து விட்டு உணவு வாங்கி வருவதாகக் கூறிச் சென்ற நவீன்குமார். தோசை வாங்கி விட்டு வரும் போது, சட்னியில் மயக்க மருந்தை கலந்து கொடுத்துள்ளார். 

இது குறித்து பாதிக்கப்பட்ட அந்த இளம் பெண் கூறியதாவது: தோசை வாங்கி வந்த நவீன் குமார் சட்னியில் மயக்க மருந்தை கலந்து கொடுத்ததால் தான் மயங்கி விட்டேன், மயக்கம் தெளிந்து பார்த்த போது தனக்கு உடல் அசதியாக இருப்பதை உணர்ந்து கேட்ட போது, பயண களைப்பு என்று நவீன் குமார் தெரிவித்தார். மேலும் ரத்தப் போக்கு ஏற்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, குளிக்கச் சென்று விட்டு திரும்பிய போது, தான் குளித்ததை ரகசிய செல்போன் கேமரா மூலம் படம் பிடித்து பார்த்துக் கொண்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தேன்.

இது குறித்து அவரிடம் கேட்டபோது, வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, மயக்க நிலையில் தன்னுடன் உடலுறவு கொண்ட காட்சிகளைக் காட்டி நவீன் குமார் மேலும் ஒரு அதிர்ச்சி அளித்தார். அப்போது ஏற்பட்ட தகராறில் தனது செல்போனை நவீன் குமார் உடைத்து விட்டார். மேலும், கழுத்தை நெறித்து கொலை செய்ய முயற்சித்தது மட்டுமல்லாமல் செய்த தவறுகள் வெளியாகமால் இருக்க, தான் ஒரு மன நோயாளி என மருத்துவர் மூலம் சான்றிதழ் பெற்று எனது பெற்றோரிடமே நான் மன நோயாளி என சித்தரித்துள்ளார். இது குறித்து வெளியோ கூறினால் ஆபாச உடலுறவு காட்சிகளை யூட்யூபில் வெளியிட்டு விடுவதாக நவீன் குமார் மிரட்டினார் என அந்த பெண் அச்சத்துடன் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், தற்போது  நிர்வாண குளியல் காட்சிகளை மட்டும் நவீன் குமாரின் காதலி ஆனந்தி என்ற பெண்ணிடம் காண்பித்து அவரிடம் மேலும் 3 லட்ச ரூபாய் பணம் பறிக்குமாறு கூறியதாக அந்த இளம்பெண் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து செய்தியாளர்கள் ஆனந்தி மற்றும் நவீன்குமாரிடம் நேரில் பதிலளிக்குமாறு கேட்டதற்கு ஆனந்தி திருச்சியில் இருப்பதாகவும், நவீன்குமார் குற்றத்தை மறுத்து மழுப்பலான பதிலை தெரிவித்துள்ளனர். 

Newstm.in 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP