இனி 20 ரூபாய்ல சென்னையைச் சுற்றலாம்! புதிய திட்டம் அறிமுகம்!

சென்னையில் மெட்ரோ பயணிகளின் வசதிக்காக பல்வேறு புதிய வசதிகளை மெட்ரோ நிர்வாகம் செய்து வருகிறது. குறிப்பாக மெட்ரோ ரயில் நிலையத்தின் அருகில் உள்ள பேருந்து நிலையம் மற்றும் மின்சார ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் ஷேர் ஆட்டோ, ஷேர் கார் வசதி மற்றும் வாடகை சைக்கிள்கள் என பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
 | 

இந்நிலையில், மெட்ரோ ரெயில் பயணிகளை அதிகப்படுத்தவும், மெட்ரோ பயணத்தை ஊக்குவிக்கவும்  வாடகைக்கு மின்சார ஸ்கூட்டர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக கிண்டி மற்றும் ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையங்களில் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் வாடகைக்கு விடப்படுகிறது. தொடர்ந்து வடபழனி மற்றும் அண்ணாநகர் டவர் ஆகிய ரயில் நிலையங்களிலும் மின்சார ஸ்கூட்டர் திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளதாக மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இனி 20 ரூபாய்ல சென்னையைச் சுற்றலாம்! புதிய திட்டம் அறிமுகம்!

இந்த திட்டத்தை வோகோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இது குறித்து மெட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், எலக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை 20 ரூபாய் கொடுத்து புக்கிங் செய்து எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம் என்றும், இதற்காக ஓட்டுநர் உரிமம் மற்றும் புகைப்படத்தை ஆன்லைனில் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.4 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும் எனவும், 10 மணிநேரத்திற்கு மேல் வாகனத்தை பயன்படுத்தினால் 1 மணி நேரத்திற்கு கூடுதலாக ரூ.36 வசூலிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது. 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP