1. Home
  2. தமிழ்நாடு

பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்களிடம் கருணை காட்ட முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்

பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்களிடம் கருணை காட்ட முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்

பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்களுக்கு கருணை காட்ட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னையில் தனியார் தொழிற்சாலை ஒன்றில் பெண்ணிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட ஒருவரை பணி நீக்கம் செய்து நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதனை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் ,அந்த பணியாளரை மீண்டும் பணியில் சேர்க்கும் படி தொழிலாளர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன் மேல்முறையீட்டு மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது பாலியல் தொழிலில் ஈடுபட்டவரை பணி நீக்கம் செய்த நிறுவனத்தின் நடவடிக்கை சரியானது. பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்களுக்கு கருணை காட்ட முடியாது. பெண்களுக்கு எதிராக வேலை செய்யும் இடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அந்தந்த நிறுவனங்களின் கடமை என்று குறிப்பிட்டதோடு, பணியாளரை சேர்க்க தொழிலாளர் நீதிமன்றம் பிறப்பித்த ஆணையை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like