பணிபுரிந்த வீட்டில் திருடியே கார், பங்களா என சொகுசு வாழ்க்கை வாழ்ந்த பெண்கள்.. கிலோ கணக்கில் நகைகள் பறிமுதல்

பணிபுரிந்த வீட்டில் திருடியே கார், பங்களா என சொகுசு வாழ்க்கை வாழ்ந்த பெண்கள்.. கிலோ கணக்கில் நகைகள் பறிமுதல்
 | 

கார், பங்களா சொகுசு வாழ்க்கை! வேலைப் பார்த்துக் கொண்டே திருடிய சகோதரிகள்!!

சென்னை எழும்பூரில் வசித்து வருபவர் தொழிலதிபர் கல்யாண்  குமார். இவர் கடந்த 5ஆம் தேதி வீட்டில் நகை திருடு போனதாக எழும்பூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்த போலீசார், கல்யாண்குமார் வீட்டில் வேலைபார்த்து வந்த சகோதரிகளான லோகநாயகி மற்றும் ஷாலினி ஆகிய இருவரையும் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர். போலீசார் மேற்கொண்ட கிடுக்குபிடி விசாரணையில் அவர்கள் இருவரும் தான் நகைகளை திருடியது அம்பலமானது. அதாவது கல்யாண குமார் வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதால், தனது தாய், தந்தையை பார்த்துக் கொள்ள லோகநாயகி மற்றும் ஷாலினி இருவரையும் நியமித்துள்ளார். இதையடுத்து சமீபத்தில் நகைகளை சரிபார்த்த போது பல பொருட்கள் வீட்டில் காணாமல் போனது தெரிய வந்தது. வீட்டில் பதிவாகியிருந்த கைரேகை, பணிப்பெண்களின் செல்போன்களை ஆய்வு செய்ததன் மூலம் அவர்கள் தான் திருடியதை உறுதி செய்தனர்.

கார், பங்களா சொகுசு வாழ்க்கை! வேலைப் பார்த்துக் கொண்டே திருடிய சகோதரிகள்!!மேலும், கல்யாணகுமாரின் பெற்றோருக்கு உணவில் தூக்க மாத்திரையைக் கலந்துகொடுத்துவிட்டு, கள்ளச்சாவி போட்டு நகை மற்றும் பணத்தை திருடியது தெரிய வந்துள்ளது. இந்நிலையில், கொள்ளையடித்த லோகநாயகி, ஷாலினி மற்றும் அவர்களுக்கு உதவியாக மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கிலோ கணக்கில் நகைகளை திருடி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர்.

கார், பங்களா சொகுசு வாழ்க்கை! வேலைப் பார்த்துக் கொண்டே திருடிய சகோதரிகள்!!அதுமட்டுமின்றி லோகநாயகி தனது மகளுக்கு ஆடம்பர திருமணம், கார் போன்றவற்றை வாங்கியுள்ளார். இதுபோக இருவரிடமிருந்து 1.75 கிலோ தங்கம் மற்றும் இரண்டு லட்ச ரூபாய் பணம், கார் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.   

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP