பெண் வீட்டில் விருந்து.. 32 சவரன் நகை, ரொக்கம், செல்போன்களுடன் மாப்பிளை மாயம்.. மாமியார் வீட்டிற்கு போன கதை..

சென்னை மாதவரம் கே.கே.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரி (31) விவாகரத்து பெற்று தனது தாயாருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் மறுமணம் செய்ய தனியார் திருமண தகவல் மையத்தில் பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில் ரமேஷ் (32) என்பவர், புவனேஸ்வரியின் தாயார் லட்சுமியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு
 | 

உஷார்!! மணப்பெண் வீட்டில் 32 சவரன் நகை பணத்துடன் எஸ்கேப்பான திடீர் மாபிள்ளை!! திருமண தகவல் மையத்தால் நிகழ்ந்த கொடூரம்!!

சென்னை மாதவரம் கே.கே.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரி (31) விவாகரத்து பெற்று தனது தாயாருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் மறுமணம் செய்ய தனியார் திருமண தகவல் மையத்தில் பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில் ரமேஷ் (32) என்பவர், புவனேஸ்வரியின் தாயார் லட்சுமியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவருடைய மகளை மறுமணம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார்.

தான் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கஸ்டம்ஸ் அதிகாரியாக பணிபுரிந்து வருவதாகவும் கூறியுள்ளார். தொடர்ந்து கடந்த ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி மாதவரத்தில் உள்ள புவனேஸ்வரியின் வீட்டிற்கு அவர் வந்துள்ளார். அவரை பெண் பார்த்து திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்து விட்டு சென்றுள்ளார்.

உஷார்!! மணப்பெண் வீட்டில் 32 சவரன் நகை பணத்துடன் எஸ்கேப்பான திடீர் மாபிள்ளை!! திருமண தகவல் மையத்தால் நிகழ்ந்த கொடூரம்!!

பின்னர் அடிக்கடி செல்போனில் பேசிய நிலையில் மீண்டும் அக்டோபர் 29ஆம் தேதி புவனேஸ்வரியின் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு உணவு அருந்தி விட்டு புவனேஸ்வரியின் அறையில் தங்கி விட்டு பின்னர் திரும்பினார். அவர் சென்ற பின்னர் புவனேஸ்வரி தனது அறையில் இருந்த பீரோவை திறந்து பார்த்த போது, அதில் வைத்திருந்த 32 சவரன் நகை, ரூ.27 ஆயிரம்  மற்றும் விலை உயர்ந்த செல்போன், ஏடிஎம் கார்டு ஆகியவை திருடு போனது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உஷார்!! மணப்பெண் வீட்டில் 32 சவரன் நகை பணத்துடன் எஸ்கேப்பான திடீர் மாபிள்ளை!! திருமண தகவல் மையத்தால் நிகழ்ந்த கொடூரம்!!

ரமேஷ் செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அது அணைத்து வைக்கப்பட்டிருந்ததால் சந்தேகம் அடைந்தார். பின்னர் இதுபற்றி லட்சுமி மாதவரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். பின்னர் தலைமறைவாக இருந்த ரமேஷ் திருநின்றவூர் பகுதியில் பதுங்கியிருந்த போது நேற்று முன்தினம் பிடித்தனர். அவர் ஏற்கனவே திருமணம் ஆவனர் என்பதும், ஆடம்பர வாழ்க்கைக்கு திருடி வந்ததும் தெரியவந்தது. பெரிய நிறுவனங்களில் வேலை வாங்கித் தருகிறேன் என்று கூறி ஒரு சிலரிடம்  பல ஆயிரம் ரூபாய் ஏமாற்றியுள்ளார்.

உஷார்!! மணப்பெண் வீட்டில் 32 சவரன் நகை பணத்துடன் எஸ்கேப்பான திடீர் மாபிள்ளை!! திருமண தகவல் மையத்தால் நிகழ்ந்த கொடூரம்!!

இதையடுத்து, திருமண தகவல் மையங்களில் பதிவு செய்துள்ள வசதியான விதவை மற்றும் விவாகரத்து பெற்ற பெண்களை  ஏமாற்றி திருமணம் செய்து கொள்வது போல் நடித்து ஏமாற்றலாம் என்று முடிவு செய்து  ரமேஷ் திருமண தகவல் மையத்தின் மூலம் புவனேஸ்வரியை தேர்வு செய்து தான் ஒரு கஸ்டம்ஸ் அதிகாரி போல் நடித்து நகை, பணத்தை கொள்ளை அடித்து சென்றது விசாரணையில் தெரியவந்தது. பின்னர் அவரிடம் இருந்த 21 சவரன் நகையை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட ரமேஷை மாதவரம்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP