பெண் எம்எல்ஏ - ஒ.செ மோதல்.. பதிலுக்கு பதில் கன்னத்தில் அறைந்ததால் நிர்வாகிகள் அதிர்ச்சி!!

பெண் எம்எல்ஏ ஒன்றிய செயலாளர் மோதல்.. பதிலுக்கு பதில் கன்னத்தில் அறைந்ததால் நிர்வாகிகள் அதிர்ச்சி..!!
 | 

பெண் எம்எல்ஏ - ஒ.செ மோதல்.. பதிலுக்கு பதில் கன்னத்தில் அறைந்ததால் நிர்வாகிகள் அதிர்ச்சி!!

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் அதிமுகவை சேர்ந்த பரமேஸ்வரி. உள்ளாட்சித் தேர்தலில் இவரின் கணவர் முருகன், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவினார். இதனால் அங்குள்ள  அதிமுக நிர்வாகிகள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. இந்தநிலையில், கடந்த 17ஆம் தேதி மாலை, உள்ளாட்சித் தேர்தல் தோல்வி குறித்து மண்ணச்சநல்லூர் ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். அதில், மண்ணச்சநல்லூர் ஒன்றியத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட எம்.எல்.ஏ, பரமேஸ்வரியின் கணவர் முருகன், மண்ணச்சநல்லூர் அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர் ஜெயக்குமார், முன்னாள் ஒன்றிய துணைத்தலைவர் வெற்றிச்செல்வி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் தோல்வி குறித்து விவாதித்ததாகக் கூறப்படுகிறது.

பெண் எம்எல்ஏ - ஒ.செ மோதல்.. பதிலுக்கு பதில் கன்னத்தில் அறைந்ததால் நிர்வாகிகள் அதிர்ச்சி!!

அப்போது, `எம்.எல்.ஏ பரமேஸ்வரியின் செயல்பாடுகளே தோல்விக்கு முக்கிய காரணம்' எனக் குற்றச்சாட்டை முன்வைத்து சிலர் பேசியுள்ளனர். இதனால், ஒன்றியச் செயலாளர் ஜெயக்குமாருக்கும் எம்.எல்.ஏ பரமேஸ்வரிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட, கோபமடைந்த எம்.எல்.ஏ பரமேஸ்வரி ஜெயக்குமாரின் கன்னத்தில் அறைந்ததாகவும், அதில் கடுப்பான ஜெயக்குமார் பதிலுக்கு எம்.எல்.ஏ-வை கன்னத்தில் அறைந்ததாகவும் தகவல் பரவியது. மேலும் தான் கொடுத்த டெண்டர் பணம் ஒரு லட்சம் ரூபாயை தர மறுப்பதாக ஜெயக்குமார் கூட்டத்தில் சத்தம்போட்டார்.

பெண் எம்எல்ஏ - ஒ.செ மோதல்.. பதிலுக்கு பதில் கன்னத்தில் அறைந்ததால் நிர்வாகிகள் அதிர்ச்சி!!மேலும் கட்சி தலைமை அனுப்பிய தொகையை முழுமையாக செலவு செய்யாமல் பதுக்கியதாகவும் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த எம்எல்ஏ பரமேஸ்வரி திடீரென மயக்கம் போட்டு கீழே விழுந்து அந்த இடத்தையே பரபரப்புக்கு உள்ளாக்கியது. கமிஷன் தொகைக்காக எம்எல்ஏ ஒன்றிய செயலாளர் ஆகியோர் ஒருவரை ஒருவர் அடித்து கொண்ட சம்பவம் கட்சியின் தலைமை வரை சென்றதால் இரண்டு தரப்பையும் சென்னைக்கு வரவழைத்து விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். 

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP