கட்டிலில் கட்டிவைத்து உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட பெண்..! டிஎன்ஏ சோதனை தீவிரம்

கட்டிலில் கட்டிவைத்து உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட பெண்..! டிஎன்ஏ சோதனை தீவிரம்
 | 

இளம்பெண் உயிருடன் எரித்துக் கொலை! வன்முறை களமாகும் உபி மாநிலம்!

இந்தியாவிலேயே வன்முறை களமாக மாறி வருகிறது உத்திர பிரதேச மாநிலம். கொலைகள், பாலியல் அக்கிரமங்களும் சர்வ சாதாரணமாக அங்கு அரங்கேறி வருவதாக பல்வேறு தரப்பில் இருந்து புகார் எழுந்து வருகிறது. 

இளம்பெண் உயிருடன் எரித்துக் கொலை! வன்முறை களமாகும் உபி மாநிலம்!

உத்தரபிரதேச மாநிலம் பிஜோனூர் மாவட்டத்தில் விவசாய தோட்டத்தில் பெண் ஒருவர் பிணமாக கிடப்பதை அப்பகுதி மக்கள் கண்டனர். தகவல் அடிப்படையில் அங்கு விரைந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த பெண் யார்? எதற்காக கொல்லப்பட்டார் என்பதும் உடனடியாக தெரியவில்லை. உடல் முழுவதும் எரிந்த நிலையில் காணப்பட்டதால் அடையாளம் காணமுடியவில்லை என்றும் கட்டிலில் கயிற்றால் கட்டப்பட்டுதான் பெண்ணை எரித்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.

இளம்பெண் உயிருடன் எரித்துக் கொலை! வன்முறை களமாகும் உபி மாநிலம்!

அதனால், உயிரோடு எரித்துக் கொன்று இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் கொலை நடந்த இடத்தில் துப்பாக்கி குண்டுகளும் சிதறி கிடந்தன. அதே நேரத்தில் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இளம்பெண் உயிருடன் எரித்துக் கொலை! வன்முறை களமாகும் உபி மாநிலம்!

எதுவாயினும் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னர் தான் உறுதியாக கூற முடியும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. மேலும் அந்த பெண் யார் என்பதை அடையாளம் காண அவரது டிஎன்ஏ மாதிரிகளை சேகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP