இளம்பெண்ணிடம் கத்தி முனையில் வழிப்பறி.. கணவருடன் சேர்ந்து மனைவியும் கைது..

இளம்பெண்ணிடம் கத்தி முனையில் வழிப்பறி.. கணவருடன் சேர்ந்து மனைவியும் கைது..
 | 

இளம்பெண்ணிடம் கத்தி முனையில் வழிப்பறி.. கணவருடன் சேர்ந்து மனைவியும் கைது..

செல்போன் பறிப்பு, செயின் பறிப்பு போன்ற சம்பவங்களில் இளைஞர்கள் ஈடுபடுகின்றனர். பின்னர் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் அவர்களை போலீசார் கைது செய்யப்பட்டு வருவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பெண்களும் வழிப்பறியில்  ஈடுபட்டு வருவது வேதனை அளிக்கிறது. அண்மையில் அண்ணாநகரில் காதலனுடன் பைக்கில் சென்ற இளம்பெண், செல்போன் பறிப்பில் ஈடுபட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தோம். தற்போது காத்தியை காட்டி மிரட்டி பெண் ஒருவர் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளார்.

இளம்பெண்ணிடம் கத்தி முனையில் வழிப்பறி.. கணவருடன் சேர்ந்து மனைவியும் கைது..சென்னை புளியந்தோப்பு எஸ்.பி.கோயில் தெருவை சேர்ந்த கவுரி (28), கடந்த 13ஆம் தேதி இரவு வடக்கு கடற்கரை, ராஜாஜி சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது, இவரை வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி ஆண் மற்றும் ஒரு பெண் செல்போனை  பறித்துச் சென்றனர்.

இளம்பெண்ணிடம் கத்தி முனையில் வழிப்பறி.. கணவருடன் சேர்ந்து மனைவியும் கைது..

இது தொடர்பான புகாரில் செல்போனை பறித்து சென்ற கொருக்குப்பேட்டை கருமாரியம்மன் 3வது தெருவை சேர்ந்த வெங்கடேஷ் (எ) மண்ணய்யா (40) மற்றும் அவரது மனைவி பிரியங்கா (23) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், இவர்கள் பல இடங்களில் இதுபோல் கைவரிசை காட்டியது தெரிந்தது. மேலும் அவர்களிடமிருந்து 4 விலை உயர்ந்த செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP