சமூகவலைதளத்தில் மூழ்கிக்கிடந்த மனைவிக்கு சரமாரி கத்திகுத்து.. கணவர் வெறிச்செயல்

சமூகவலைதளத்தில் மூழ்கிக்கிடந்த மனைவிக்கு சரமாரி கத்திகுத்து.. கணவர் வெறிச்செயல்
 | 

சமூகவலைதளத்தில் மூழ்கிக்கிடந்த மனைவிக்கு சரமாரி கத்திகுத்து.. கணவர் வெறிச்செயல்

ஆண் நண்பருடன் பேசியவாறு சமூகவலைதளத்தில் மூழ்கிக்கிடந்த மனைவியை கணவர் கத்தியால் சரமாரியாக குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு அருகே கொல்லம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்தவர் சர்புதீன். இவர் ஈரோடு ரயில்வே பார்சல் அலுவலகத்தில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருக்கு, தனது மனைவி ஜான்ஜெனக் மற்றும் 12 வயதில் மகளும் வசித்து வந்தார். வீட்டில் இருந்து குடும்பத்தை கவனித்து வந்த ஜான்ஜெனக், அதிக நேரம் சமூகவலைதளங்களை பயன்படுத்திவந்துள்ளார்.

சமூகவலைதளத்தில் மூழ்கிக்கிடந்த மனைவிக்கு சரமாரி கத்திகுத்து.. கணவர் வெறிச்செயல்

அப்படி, முகநூல் மூலம், அறிமுகமான சத்தியமங்கலத்தைச் சேர்ந்த ஒரு இளைஞருடன் ஜான்ஜெனக் நட்பாக பேசி வந்துள்ளார். இதனை அறித்த சர்புதீன், ஃபேஸ்புக் மூலம் ஆண்களுடன் பேச வேண்டாம் என கண்டித்துள்ளார். ஆனால், கணவரின் எச்சரிக்கையை அலட்சியப்படுத்திய ஜான்ஜெனக், அந்த இளைஞருடன் தொடர்ந்து பேசியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சர்புதீன் வேலைமுடிந்து வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, கணவர் வருவதை அறியாமல், ஜான்ஜெனக் செல்பேனில் மூழ்கிக் கிடந்துள்ளார்.

சமூகவலைதளத்தில் மூழ்கிக்கிடந்த மனைவிக்கு சரமாரி கத்திகுத்து.. கணவர் வெறிச்செயல்

இதனால், ஆத்திரமடைந்த சர்புதீன், ஜான்ஜெனக்குடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், சர்புதீன், பாக்கெட்டில் வைத்திருந்த சிறிய கத்தியை எடுத்து, மனைவியின் கழுத்து, முதுகு உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக குத்தியுள்ளார். அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், இரத்த வெள்ளத்தில் மிதந்த ஜான்ஜெனக்கை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மனைவியை கத்தியால் குத்திய சர்ப்புதீனை கைது செய்த போலீசார், அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சிறையில் அடைத்தனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP