குடிகார கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்த மனைவி..

கொலுசை அடமானம் வைத்து குடித்த கணவரை மனைவி பெட்ரோல் ஊற்றி கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 | 

குடிகார கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்த மனைவி..

கொலுசை அடமானம் வைத்து குடித்த கணவரை மனைவி பெட்ரோல் ஊற்றி கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் அருகே கண்டமங்கலம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் செந்தில். இவருக்கு சித்ரா என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். கொத்தனார் வேலைக்கு சென்று வந்த செந்தில் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி ஒழுங்காக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி சண்டைகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் நேற்று முன் தினம் சித்ராவின் கால் கொலுசை கொண்டு சென்று அடமானம் வைத்துக் குடித்துள்ளார் செந்தில். இது குறித்து சித்ரா செந்திலிடம் கேட்டுள்ளார். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த சித்ரா, வீட்டிற்கு வெளியே நின்ற மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோல் எடுத்து செந்தில் மீது ஊற்றி கொளுத்தியுள்ளார். உடலில் தீ பரவியதும் செந்தில் கதறியுள்ளார்.

சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வெளியே வந்து பார்த்தபோது, செந்தில் தீபற்றி எரிந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் சித்ராவுடன் சேர்ந்து, தீயை அணைத்து, ஆம்புலன்ஸ் மூலம் புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு செந்திலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சித்ராவைக் கைது செய்துள்ளனர்.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP