மனைவிகளுக்கு இடையே போட்டி.. மதுவில் விஷம் கலந்துகொடுத்து ஒருவர் கொலை..

தேர்தல் முன்விரோதம்... மதுவில் விஷம் கலந்துகொடுத்து அதிமுக பிரமுகர் கொலை..
 | 

மதுவில் விஷம் கலந்து அதிமுக பிரமுகர் கொலை! மனைவிக்காக திமுக பிரமுகர் செய்த வேலை!

தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதனையொட்டி பல இடங்களில் மோதல், வன்முறை நிகழ்ந்தது. தற்போது அதற்கு ஒருபடி மேலேசென்று ஒரு கொலையே அரங்கேரியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை அடுத்த இருக்கூர் ஊராட்சியின் வார்டு உறுப்பினர் தேர்தலில், தங்களது மனைவியை போட்டியிட வைப்பது தொடர்பாக திமுகவைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கும், அதிமுகவைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவருக்கும் பிரச்சனை ஏற்பட்டது. இந்த தேர்தலில் செந்தில்குமாரின் மனைவி வார்டு உறுப்பினராக வெற்றிபெற்றார். இதனால், ஆத்திரத்தில் இருந்த ஆறுமுகமும், அவரது நண்பரும், செந்தில்குமாரையும் அவரது நண்பரையும் மது குடிக்க அழைத்துள்ளனர்.

மதுவில் விஷம் கலந்து அதிமுக பிரமுகர் கொலை! மனைவிக்காக திமுக பிரமுகர் செய்த வேலை!

செந்தில்குமாரை பழிவாங்க மதுவில் விஷம் கலந்து தயாராக வைத்திருந்தனர். இதனை அறியாத செந்தில்குமார் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் விஷம் கலந்த மதுவை அருந்தினர். பின்னர் சிறிது நேரத்தில் மயக்கம் ஏற்பட்டது. ஆறுமுகம் அவரது நண்பரும் தப்பியோடிய நிலையில், மயங்கி கிடப்பதை கண்ட அங்கு வந்தவர்கள் செந்தில்குமாரையும், அவரது நண்பரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுச்சென்றனர். இதில் உடல்நிலை பாதிக்கப்பட்ட செந்தில் குமார், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவரது நண்பர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மதுவில் விஷம் கலந்து அதிமுக பிரமுகர் கொலை! மனைவிக்காக திமுக பிரமுகர் செய்த வேலை!

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆறுமுகம் மற்றும் அவரது நண்பர் சண்முகத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்தல் விரோதம் காரணமாக நிகழ்ந்த கொலை சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP