தெருக்குழாயில் தண்ணீர் பிடிக்கும்போது பயங்கரம்.. உருட்டுக்கட்டையை எடுத்து வந்து..!

தெருக்குழாயில் தண்ணீர் பிடிக்கும்போது பயங்கரம்.. உருட்டுக்கட்டையை எடுத்து வந்து..!
 | 

தெருக்குழாயில் தண்ணீர் பிடிக்கும்போது பயங்கரம்.. உருட்டுக்கட்டையை எடுத்து வந்து..!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட பிரச்னையில் பெண் உருட்டுக்கட்டையால் அடித்துக் கொல்லப்பட்டார்.
சேர்ந்தமரம் கிராமத்தைச் சேர்ந்த அந்தோணி வியாகம்மாள் என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சீமராயப்பன் என்பவருக்கும் தெருக்குழாயில் தண்ணீர் பிடிக்கும் போது பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னை நீடித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு தண்ணீர் பிடிக்கும்போது மீண்டும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தெருக்குழாயில் தண்ணீர் பிடிக்கும்போது பயங்கரம்.. உருட்டுக்கட்டையை எடுத்து வந்து..!

அப்போது ஆத்திரம் அடைந்த சீமராயப்பன் அங்கு சென்று வியாகம்மாளை உருட்டுக்கட்டையால் சராமரியாக தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் அந்தோணி வியாகம்மாள் நிகழ்விடத்திலேயே சரிந்தார். இதனைகண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுச்சென்றனர். எனினும் அவர் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.

தெருக்குழாயில் தண்ணீர் பிடிக்கும்போது பயங்கரம்.. உருட்டுக்கட்டையை எடுத்து வந்து..!

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவான சீமராயப்பனை தேடி வருகின்றனர். தெருக்குழாயில் தண்ணீர் பிடிப்பது தொடர்பான மோதலில் பெண் அடித்தே கொல்லப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP