1. Home
  2. தமிழ்நாடு

எந்த இடத்தில் தீபம் ஏற்றினால் என்ன பலன் கிடைக்கும்?

எந்த இடத்தில் தீபம் ஏற்றினால் என்ன பலன் கிடைக்கும்?

கார்த்திகை தீபத்தின் சிறப்பே வீட்டிலும், வீட்டைச் சுற்றிலும் தீபங்களை ஏற்றி வழிபடுவது தான். தீப வழிப்பாடு நம் கலாச்சாரத்துடன் இரண்டறக் கலந்தது. தீபம் ஏற்றி வைத்து வழிபட்டால், தீய சக்திகள் விலகி வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும். ஆரோக்கியம், தனவரவு ஆகியவை பெருகும். பூஜையறையில் இரண்டு கார்த்திகை விளக்குகள் ஏற்றி வைத்து வணங்கினால் சர்வ மங்கலங்கள் உண்டாகும். சமையல் அறையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்து வணங்கினால் அன்ன தோஷங்கள் ஏற்படாது. தோட்டம் முதலான வெளிப்பகுதிகளில், எமனை வேண்டி தீபம் ஏற்ற வேண்டும். இதனால் மரண பயம் நீங்கும், ஆயுள்விருத்தி உண்டாகும். திண்ணைகளில் நான்கு விளக்குகள் ஏற்றுவதன் மூலன் தீயவைகள் வீட்டிற்குள் நுழையாது.

தீபத்தில் மகாலட்சுமி வசிப்பதால், தீபம் எற்றியதும், தீபலட்சுமியே நமோ நம என்று கூறி வணங்குவது அவசியம்.
வீட்டின் வெளிப்புறத்தில் உயர்ந்த பகுதியில் ஏற்றிவைக்கப்படும் தீபம் ஆகாச தீபமாகும். கார்த்திகை மாதம் சதுர்த்தி திதி நாளில் இந்தத் தீபத்தை ஏற்றி வழிபட்டால், எம பயம் நீங்கும்.

newstm.in

Trending News

Latest News

You May Like