என்ன தைரியம்? காவல் ஆய்வாளரின் மகளையே காரில் கடத்தல் மாணவர்கள்.. அப்புறம் நடந்த சம்பவம்

உளவு பிரிவு ஆய்வாளரின் மகள் காரில் கடத்தல்.. கடைசி நேரத்தில் திருமணம் நிறுத்தம்.. தர்மஅடி கொடுத்த மக்கள்
 | 

என்ன தைரியம்? காவல் ஆய்வாளரின் மகளையே காரில் கடத்தல் மாணவர்கள்.. அப்புறம் நடந்த சம்பவம்

சென்னை மாங்காடு அருகே மத்திய உளவு பிரிவு ஆய்வாளரின் மகளை ஒரு தலையாக காதலித்த நபர் திருமணம் செய்து கொள்வதற்காக பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து கடத்திய நிலையில் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். மாங்காடு அடுத்த கெருகம்பாக்கம் பகுதியில் வேகமாக சென்ற கார் சாலையோரமாக இருந்த பள்ளத்தில் சிக்கியது. அந்த வழியாக சென்றவர்கள் காருக்குள் பார்த்த போது, 3 இளைஞர்களும் கதறி அழுதபடி ஒரு இளம் பெண்ணும் இருந்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த அப்பகுதியினர் காரில் இருந்து இளம்பெண்ணை கிழே இறக்கினர். மேலும் 3 இளைஞர்களுக்கும் தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

என்ன தைரியம்? காவல் ஆய்வாளரின் மகளையே காரில் கடத்தல் மாணவர்கள்.. அப்புறம் நடந்த சம்பவம்

போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்ட நபர்களுள் ஒருவர் மதனந்தபுரத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் என்பவதும், பள்ளி நாட்களில் இருந்தே அந்த இளம்பெண்ணை காதலித்து வந்ததும் தெரியவந்தது. அந்த பெண் தமது காதலை ஏற்றுக்கொள்ளாததால் திருமணம் செய்துக்கொள்வதற்காக கல்லுாரிக்கு சென்று கொண்டிருந்த அவரை 11ஆம் வகுப்பு பயிலும் தமது நண்பர்களுடன் சேர்ந்து கடத்தியதும் தெரியவந்தது. கடத்தப்பட்ட பெண் மத்திய உளவு பிரிவு ஆய்வாளரின் மகள் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார், 3 பேரையும் கைது செய்து சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் அடைத்தனர். மத்திய உளவு பிரிவு ஆய்வாளரின் மகளையே மாணவர்கள் காரில் கடத்திய சம்பவம் அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP