1. Home
  2. தமிழ்நாடு

(FasTag) பாஸ்ட் டேக் கார்ட் வாங்குவதால் இத்தனை நன்மைகளா? வாடிக்கையாளர்களுக்கு குஷியான தகவல்!

(FasTag) பாஸ்ட் டேக் கார்ட் வாங்குவதால் இத்தனை நன்மைகளா? வாடிக்கையாளர்களுக்கு குஷியான தகவல்!

சுங்கசாவடிகளில் வாகனங்கள் பணம் செலுத்தும் முறைக்கு பாஸ்ட் டேக் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், பாஸ்ட் டேக் பெறுவதற்கான காலகெடுவை தற்சமயம் ஜனவரி மாதம் 15ம் தேதி வரையில் நீட்டித்துள்ளது.

பாஸ்ட் டேக் பெறுவதில் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்று பார்க்கலாம். பொதுவாக நாம் நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் போது பாஸ்டேக் கார்டு பெறுவதன் மூலமாக பல நன்மைகளை பெறலாம்.

உதாரணமாக ஒவ்வொரு சுங்கசாவடிகளிலும் பணம் செலுத்துவதற்காக கையில் தனியாக பணம் எடுத்து செல்ல தேவையில்லை. சுங்கசாவடிகளில் பாஸ்ட் டேக் மூலமாக சுலபமாக பணத்தை செலுத்தும் வசதி கிடைக்கிறது.

சுங்கசாவடிகளில் பணம் செலுத்த வாகனத்தை வரிசையில் நிறுத்த தேவையில்லை. நாம், நமது வாகனத்தில் நீண்ட வரிசையில் நிற்காமல், அந்த இடத்தை கடந்து சென்றுக் கொண்டே இருக்கலாம். இதனால் தேவையில்லாமல் ஏற்படும் நேர விரயம் தவிர்க்கப்படுகிறது.

பாஸ்ட் டேக் கார்டை ஆன்லைன் மூலம் கிரெடிட், டெபிட் அல்லது நெட் பேங்கிங் மூலமாக பயன்படுத்தலாம். சுங்கசாவடிகளை கடந்த பின்பு கழிப்பட்ட பணம் மற்றும் மீதம் உள்ள பணம் குறித்த தகவல் உடனடியாக குறுந்தகவல்களாக நமது செல்போன்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

பாஸ்ட் டேக் மூலமாக பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு சுங்கசாவடி கட்டணத்தில் 10 சதவீத தள்ளுபடி தரப்படுகிறது. இதனால் பணமும் மிச்சமாகிறது.

newstm.in

Trending News

Latest News

You May Like