பள்ளி மாணவர்களுக்கு ஓர் இன்ப செய்தி!

தமிழகத்திலுள்ள மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவர்களின் நலனுக்காக காலை உணவுத் திட்டத்தை கடந்த வருடம் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முயற்சியால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிமுகப்படுத்தியிருந்தார். இந்த திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்த தமிழக முதல்வர் எடப்பாடி முடிவு.
 | 

பள்ளி மாணவர்களுக்கு ஓர் இன்ப செய்தி!

தமிழகத்திலுள்ள மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவர்களின் நலனுக்காக காலை உணவுத் திட்டத்தை கடந்த வருடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  அறிமுகப்படுத்தியிருந்தார். தற்போது, இந்த திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்த  தமிழக முதல்வர் எடப்பாடி உத்தரவிட்டுள்ளார்.


இதன்படி காலை உணவாக இட்லி, தோசை, சப்பாத்தி, பொங்கல் என மாணவ, மாணவிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வருகிறது. மாநகராட்சிப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தினால் மாணவர்களின் சேர்க்கை விகிதம் அதிகரித்திருப்பதால், தமிழகம்  முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு இந்த திட்டத்தை விரிவுப்படுத்த தற்போது திட்டமிடப்பட்டுள்ளது.

                                                     பள்ளி மாணவர்களுக்கு ஓர் இன்ப செய்தி!
இதன்  மூலம் அரசு பள்ளிகளை நோக்கி குழந்தைகளை அதிக அளவில் ஈர்க்க முடியும் என்கிற யோசனை முன்வைக்கப்பட்டது, இதனை அப்படியே ஏற்று, தமிழக முதல்வர் காலை சிற்றுண்டியுடன், பயிறு வகைகளையும் இணைத்து காலை சத்துணவாக கொடுக்கலாம் எனறு  அறிவித்துள்ளார். 

இந்த திட்டம் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனிடமும் விவாதித்துள்ளார். இந்த திட்டம் நிறைவேறினால் அரசு பள்ளியில் படிக்கும் ஏழை எளிய மாணவர்களின் இரு நேர பசியைப் போக்கிய சேவையை இந்த அரசு பெறும் என்பதில்  மாற்றுக் கருத்தும் இல்லை.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP