வீடியோ காலிங் மூலம் திருமண நிச்சயதார்த்தம்

வெளிநாட்டில் பணியாற்றும் மணமக்களுக்கு இந்தியாவில் இருக்கும் பெற்றோர்கள் ஆன்லைன் வீடியோகால் மூலமாக திருமண நிச்சயதார்த்தம் செய்து வைக்கும் காணொலி சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
 | 

வீடியோ மூலம் திருமண நிச்சயதார்த்தம்!!?

வெளிநாட்டில் பணியாற்றும் மணமக்களுக்கு இந்தியாவில் இருக்கும் பெற்றோர்கள் ஆன்லைன் வீடியோகால் மூலமாக திருமண நிச்சயதார்த்தம் செய்து வைக்கும் காணொலி சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அவசர உலகில் மனிதனின் அனைத்து தேவைகளும் ஆன்லைன் சார்ந்து இயங்கி வருகின்றன. உண்ணும் உணவு, உடுத்தும் உடை, ஆசைக்குரிய பொருட்கள் என அனைத்து தேவைகளும் ஆன்லைனில் ஆர்டர் செய்வதுடன் டோர்டெலிவிரியும் செய்யப்படும். தனிப்பட்ட தேவைகளை கடந்து, நம்முடைய கலாச்சாரம், வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்களிலும் இணையத்தின் தாக்கம் அதிகரித்துவிட்டது. அப்படிப்பட்ட ஒரு சம்பவத்தை தான் தொடர்ந்து படிக்கவுள்ளீர்கள். 

அண்மையில் ட்விட்டரில் வெளியான வீடியோ உலகளவில் டிரென்டிங்கானது. மொபைல் போன் வீடியோ காலிங்கில் இருக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஆன்லைன் மூலமாக பெற்றோர்களே திருமண நிச்சயம் செய்து வைக்கின்றனர்.குஜராத்தைச் சேர்ந்த இருவீட்டாரும் தங்களுடைய பிள்ளைகளுக்கு திருமண ஏற்பாடு செய்துள்ளனர். நிச்சயதார்த்தம் குறிக்கப்பட்ட நாளில் வெளிநாடுகளில் பணியாற்றும் மணமக்களால் வர இயலவில்லை.

                                                 வீடியோ மூலம் திருமண நிச்சயதார்த்தம்!!?

இதனால் குறித்த நாள், நேரத்தில் நிச்சயதார்த்தம் தொடங்கியது. மணப்பெண்ணும், மணமகனும் ஆன்லைன் வீடியோ கால் மூலம் மொபைல் காலிங்கில் தனித்தனியாக இணைந்தனர். திருமண நிச்சயதார்த்த சடங்குகள் தொடங்கின.அப்போது, மணமகன் வீட்டார் மணமகளை ஆசீர்வாதம் செய்யும் பொருட்டு, மொபைல் ஸ்கீரினுக்கு பொட்டு வைத்தனர். மேலும் போனைச் சுற்றி சால்வை போத்தினர். இந்த மரியாதயை ஏற்றுக் கொள்ளும் விதமாக வீடியோ காலிங்கில் இருந்த மணமகள் தலை அசைக்கிறார்.

                                                     வீடியோ மூலம் திருமண நிச்சயதார்த்தம்!!?

மேலும், இருவருடைய மொபை திரைகளுக்கு முன்னே கை மோதிரம் வைக்கப்படுகிறது. அதற்குரிய சடங்குகள் முடிக்கப்பட்ட பின்னர், இருவரும் நிச்சயக்கபப்ட்டுவிட்டதாக இருவீட்டார் அறிவிக்கின்றனர். பரஸ்பரமாக மகிழ்ச்சி வெளிப்படுத்திக் கொள்கின்றனர்.இந்த ஆன்லைன் நிச்சயதார்த்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ ஆன்லைனில் தீயாக பரவ, கலாச்சார காவலர்கள் வெகுண்டு எழுந்தனர். இந்தியாவின் கலாச்சாரம் திருமண நிகழ்வுகளில் போற்றப்படும் சூழலில், இதுபோன்று செய்யலாமா என்று பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP