வைரலாகும் வீடியோ!! வெறித்தனமாக ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் நாய்க்குட்டி!

வெறித்தனமாக ஜிம் ஒர்க் அவுட் செய்யும் நாய்க்குட்டி !
 | 

வைரலாகும் வீடியோ!! வெறித்தனமாக ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் நாய்க்குட்டி!

ஆதி காலத்தில் இருந்தே மனிதர்களுக்கு வளர்ப்பு பிராணிகள் தான் எப்போதும் துணையாக இருந்து வருகிறது. நண்பர்களும், உறவினர்களும் கைவிட்ட நிலையிலும் கூட செல்லமாக வளர்த்து வரும் வளர்ப்பு பிராணிகள் தன் எஜமானர்களுடன் இறுதி வரையில் இருந்து வந்த சம்பவங்களை உலகம் முழுவதுமே பல முறைகள் பார்த்திருக்கிறோம். அப்படி ஆசையாசையாய் வளர்த்து வந்த செல்லப் பிராணியான நாய் ஒன்று, தன் எஜமானருடம், உடற்பயிற்சியாளர்களுடன் சேர்ந்து உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ ஒன்று இணையத்தில் கடந்த ஒரு வார காலமாக வைரலாகி வருகின்றது.

டெஸ்லா என்ற பெயருடைய நாய் ஒன்று உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ, பார்ப்பவர்களுக்கும்  உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இன்ஸ்டாகிராம், ட்விட்டர், வாட்ஸ்-அப் என இணையதளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் இந்த வீடியோ கடந்த ஒரு வார காலமாக கலக்கி வருகின்றது இந்த குட்டி நாய்.

இப்படி ஒரு பயிற்சியாளர் இருந்தால் தினமும் ஜிம் செல்வோம் என பலரும் டெஸ்லாவை பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர். ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள் செய்வதை அச்சு பிசகாமல் அப்படியே மாறாமல் செய்கிறது டெஸ்லா நாய்க்குட்டி.சுவற்றில் பின்னங்கால்களை நிலைநிறுத்தி மேற்கொள்ளும் உடற்பயிற்சியை சர்வ சாதாரணமாக மேற்கொள்கிறது டெஸ்லா.

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP