விக்ரம் மகனின் அடுத்த பாய்ச்சல்!

தமிழ் சினிமாவில் தனி இடம் பிடித்தவர் சியான் விக்ரம். சேது படத்தின் மூலம் மிகப்பெரிய நடிகராக வலம் வந்து இன்றும் தனது இடத்தை மாபெரும் நடிப்பினால் தக்க வைத்து கொண்டவர்.
 | 

விக்ரம் மகனின் அடுத்த பாய்ச்சல்!

தமிழ் சினிமாவில் தனி இடம் பிடித்தவர் சியான் விக்ரம். சேது படத்தின் மூலம் மிகப்பெரிய நடிகராக வலம் வந்து இன்றும் தனது இடத்தை மாபெரும் நடிப்பினால் தக்க வைத்து கொண்டவர். இவரது மகன் த்ருவ் விக்ரம் இந்தியளவில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய அர்ஜூன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கான ஆதித்ய வர்மா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். 

முன்னதாக, பாலா இயக்கத்தில் துருவ் அறிமுகமாக ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால், படப்பிடிப்பு தொடங்கி படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், தயாரிப்பாளருக்கும் இயக்குநர் பாலாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் அந்த படம் அப்படியே கைவிடப்பட்டது. இதையடுத்து வேறு இயக்குநரை வைத்து இயக்க முடிவு செய்யப்பட்டது. 

விக்ரம் மகனின் அடுத்த பாய்ச்சல்!

அதன்படி கிரிசாயா இயக்கத்தில் துருவ் நடிக்க, படம் உருவானது. இந்தப் படத்துக்கு 'ஆதித்யா வர்மா' என்று டைட்டில் வைத்தனர். இதில் பனிதா சாந்து, பிரியா ஆனந்த், ராஜா உட்பட பலர் நடித்திருந்தனர். இப்படம் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இருப்பினும் அதிக பட்ஜெட் காரணமாக படம் சுமார் ரூ.7 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

விக்ரம் மகனின் அடுத்த பாய்ச்சல்!

இரண்டு படங்கள் எடுக்கப்பட்டதே நஷ்டத்துக்கு காரணம் என்பதால், பால இயக்கிய வர்மா படத்தை டிஜிட்டலில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது நெட்பிளிக்ஸில் படத்தை வெளியிடலாம் என்றும் அதன் மூலம் நஷ்டத்தை சரிகட்டலாம் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP