விஜய் ஆண்டனியிடம் தோல்வியடைந்த விஜய்..!

சினிமா பிஆர்வோ ரமேஷ் பாலா தனது ட்வீட்டர் பக்கத்தில் டாப் 5 டிஆர்பி ரேட்டிங் பெற்ற படங்களை வெளியிட்டுள்ளார். அதில், அஜித், நயன்தாரா நடித்து வெளியான 'விஸ்வாசம்' திரைப்படம் 18143000 புள்ளிகளை பெற்று முதல் இடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் 'பிச்சைக்காரன்' திரைப்படம் 17696000 பெற்றுள்ளது. விஜய்யின் 'சர்கார்' திரைப்படம் 16906000 புள்ளிகளை பெற்று மூன்றாம் இடத்திலும் உள்ளது
 | 

விஜய் ஆண்டனியிடம் தோல்வியடைந்த விஜய்..!

பாக்ஸ் ஆபிஸ் ரெக்கார்ட் செய்த விஜய்யின் 'பிகில்' திரைப்படம், தொலைக்காட்சியில் அதிக டிஆர்பி ரேட்டிங் பெற தவறியுள்ளது விஜய் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடித்து கடந்த தீபாவளிக்கு வெளியாகி மிகப்பெரிய வெற்றிப் பெற்ற படம் 'பிகில்'. இது, விஜய்-அட்லி கூட்டணியில் வெளியான மூன்றாவது திரைப்படமாகும். இந்தப் படம், பொங்கல் விழா சிறப்புத் திரைப்படமாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. சினிமா பாக்ஸ் ஆபிஸில் அதிகமாக வசூல் செய்வதில் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு மிகப் பெரிய போட்டி நடைபெறும். அதே போல், தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் திரைப்படங்களில் எது, அதிகமாக டிஆர்பி ரேட்டிங்கை பெறுகிறது என்பதிலும் மிகப்பெரிய போட்டி நடைபெறுகிறது.

                           விஜய் ஆண்டனியிடம் தோல்வியடைந்த விஜய்..! விஜய் ஆண்டனியிடம் தோல்வியடைந்த விஜய்..!

                                                       விஜய் ஆண்டனியிடம் தோல்வியடைந்த விஜய்..!

அதன்படி, பொங்கல் விடுமுறை நாளில் ஒளிபரப்பான 'பிகில்' திரைப்படத்தை பொதுமக்கள் அனைவரும் விரும்பிப் பார்ப்பார்கள் என எண்ணப்பட்டது. ஆனால், டிஆர்பி ரேட்டிங் சற்று அதிர்ச்சி தரக்கூடியதாக இருந்துள்ளது. சினிமா பிஆர்வோ ரமேஷ் பாலா தனது ட்வீட்டர் பக்கத்தில் டாப் 5 டிஆர்பி ரேட்டிங் பெற்ற படங்களை வெளியிட்டுள்ளார். அதில், சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா நடித்து வெளியான 'விஸ்வாசம்' திரைப்படம் அதிக புள்ளிகளை பெற்று முதல் இடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தை விஜய் ஆண்டனி நடித்து வெளியான 'பிச்சைக்காரன்' திரைப்படம் பெற்றுள்ளது. விஜய்யின் 'சர்கார்' திரைப்படம் மூன்றாம் இடத்திலும், சிவகார்த்திகேயன் நடித்து வெளியான 'சீமராஜா' திரைப்படம் நான்காம் இடத்திலும் உள்ளது. ஆனால், பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றிப் பெற்ற 'பிகில்' படம், எதிர்பார்த்த அளவிற்கு டிஆர்பி ரேட்டிங்கைப் பெறவில்லை. பிகில் திரைப்படம் ஐந்தாம் இடத்தையே பெற்றுள்ளது. விஜய் படங்களை குடும்பமாக சென்று ரசிப்பார்கள் என்று கருத்து இன்று வரையில் ரசிகர்கள் மத்தியில் உள்ள நிலையில், அவரது இந்தப் படம் முதல் இடத்தை பிடிக்காதது அவரது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP