பெண் காவலரை வீடியோ எடுத்து டிக்டாக் செய்து வெளியிட்ட இளைஞர்..! அப்புறம் நடந்ததை பாருங்க..

பெண் காவலரை வீடியோ எடுத்து டிக்டாக் செய்து வெளியிட்ட இளைஞர்..! அப்புறம் நடந்ததை பாருங்க..
 | 

பெண் காவலரை வீடியோ எடுத்து டிக்டாக் செய்து வெளியிட்ட இளைஞர்..! அப்புறம் நடந்ததை பாருங்க..

பெண் போலீஸை போனில் வீடியோ எடுத்து டிக்டாக் செய்த 19 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாவட்டம், லால்குடி பகுதியில் இம்மாதம் 16ஆம் தேதி ஜல்லிக்கட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு சமயபுரம் காவல்நிலையத்தை சேர்ந்த பெண் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பாதுகாப்பு பணி முடித்து விட்டு அப்பகுதியில் நடந்து சென்ற பெண் காவலரை ஒரு இளைஞர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். பின்னர் வீடியோவை தனது செல்போன் மூலம் டிக்டாக் செய்து வெளியிட்டுள்ளார்.

பெண் காவலரை வீடியோ எடுத்து டிக்டாக் செய்து வெளியிட்ட இளைஞர்..! அப்புறம் நடந்ததை பாருங்க..

இதனை கண்ட அந்த பெண் காவலர் புகார் அளித்தார். பின்னர் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாஉல்ஹக் உத்தரவின் பேரில், பெண்ணின் மீதான் பாலியல் சீண்டல் தடுப்புச்சட்டத்தின் கீழ் லால்குடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்ய்யப்பட்டு, சமயபுரம் காவல் ஆய்வாளர் மதன் தலைமையிலான தனிப்படையினர் மதுரை சென்று வீடியோ  எடுத்த சுரேஷ் கண்ணனை கைது செய்தனர். 

பெண் காவலரை வீடியோ எடுத்து டிக்டாக் செய்து வெளியிட்ட இளைஞர்..! அப்புறம் நடந்ததை பாருங்க..

மேலும் சுரேஷ் கண்ணனிடம் இருந்த செல்போனையும் பறிமுதல் செய்தனர்.  கடைசியில் லால்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போலீஸார் பெண் காவலரை வீடியோ எடுத்ததற்கும் அதை டிக்டாக் வீடியோ செய்து பதிவிட்டதற்கும் தண்டனையாக திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP