பிரிய முடியாத தோழிகள்.. காதலியை கரம் பிடிக்க ஆணாக மாறிய பெண்.. நீதிமன்றத்தில் தஞ்சம்..!

பிரிய முடியாத தோழிகள்.. காதலியை கரம் பிடிக்க ஆணாக மாறிய பெண்.. நீதிமன்றத்தில் தஞ்சம்..!
 | 

பிரிய முடியாத தோழிகள்.. காதலியை கரம் பிடிக்க ஆணாக மாறிய பெண்.. நீதிமன்றத்தில் தஞ்சம்..!

ஈரோடு அருகே கல்லூரி காலத்தில் ஏற்பட்ட 4 வருட நட்பை மறக்க முடியாமல் பெண், ஆணாக மாறி காதலியை கரம்பிடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 
ஈரோட்டை சேர்ந்த கல்லூரி மாணவி விஷ்ணுப் பிரியா. இவரும் நாமக்கல்லை சேர்ந்த பவித்ரா என்ற பெண்ணும் தனியார் கல்லூரி ஒன்றில் ஒரே வகுப்பில் படித்து வந்துள்ளனர். அப்போது இருவரும் மிகவும் நெருக்கமான தோழிகளாக மாறினர். இவர்களது காதல் ஒருகட்டத்தில் பிரிக்க முடியாத அளவிற்கு காதலாக மாறியது. இதனால் ஒருவரை ஒருவர் பிரிந்து செல்லாமல் வாழ்க்கை முழுவதும் ஒன்றாக வாழ முடிவெடுத்தனர்.

பிரிய முடியாத தோழிகள்.. காதலியை கரம் பிடிக்க ஆணாக மாறிய பெண்.. நீதிமன்றத்தில் தஞ்சம்..!

அதற்காக திருமணம் செய்வது என இருவரும் முடிவெடுத்தனர். அதன்படி விஷ்ணுப் பிரியா, ஆணாக மாறி பவித்ராவை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தார். விஷ்ணுப் பிரியா ஆணாக மாறி விஷ்வந்த் என பெயர் மாற்றம் செய்தார். தொடர்ந்து விஷ்வந்தும் பவித்ராவும் மதுரை மாவட்ட சட்டநீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சட்டப் பணி ஆணை குழுவிற்கு வந்து, திருமணம் செய்து வைக்குமாறு சார்பு நீதிபதி தீபாவிடம் மனு கொடுத்தனர்.

பிரிய முடியாத தோழிகள்.. காதலியை கரம் பிடிக்க ஆணாக மாறிய பெண்.. நீதிமன்றத்தில் தஞ்சம்..!பின்னர், இருவரும் வழக்கறிஞர் மோகன்தாஸ் முன்னிலையில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். ஆணாக மாறிய பெண்ணுக்கும் மற்றொரு பெண்ணுக்கும் நடைபெற்ற திருமணத்தால் நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP