உதயநிதி ஸ்டாலின் கைது! சென்னையில் பரபரப்பு!

உதயநிதி ஸ்டாலின் சென்னையில் கைது! சென்னையில் பரபரப்பு!
 | 

உதயநிதி ஸ்டாலின் கைது! சென்னையில் பரபரப்பு!

தமிழகம் முழுவதும், குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் இன்று பேரணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை சைதாப்பேட்டையில், நடிகர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் பேரணி தொடங்கி நடைப்பெற்றது. தென்சென்னை மாவட்ட திமுக சார்பில் சைதாப்பேட்டையில் நடந்த இந்த பேரணியில், குடியுரிமை சட்ட  நகலை எரித்து உதயநிதி ஸ்டாலின் போராட்டம் செய்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். 

திமுக சார்பில் பேரணி நடத்துவதற்கு சென்னை சைதாப்பேட்டை பகுதியில் மட்டும் போலீசார் அனுமதி வழங்கினார். ஆனால் திமுகவினர் பலர் கூடியதால், அந்த போராட்டம் அண்ணா சாலை வரை நீண்டது. பின்னர், திமுகவினர் அண்ணா சாலை வரை கண்டன ஆர்ப்பாட்ட போராட்டம் நடத்தினார்கள். 

இந்த போராட்டத்தில் உதயநிதி, பிரதமர் மோடிக்கும் அமித் ஷாவிற்கும் எதிராக கோஷங்கள் எழுப்பினார். போலீசார் அனுமதி வழங்கியிருந்த பகுதியை தாண்டிய நபர்களை போலீசார் கைது செய்து வருகிறார்கள். 

குடியுரிமை சட்ட நகலை கிழித்து உதயநிதி உள்ளிட்டோர் போராட்டம் செய்தனர். எரிக்கப்பட்ட மசோதாவை திமுகவினர் பின்பு கொளுத்தினார்கள். இந்நிலையில் சட்ட நகலை கிழித்த உதயநிதி உள்ளிட்ட முக்கியமான திமுக உறுப்பினர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டார்கள்

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP