காதலிக்கு அடித்துக்கொண்ட இரு இளைஞர்கள்! காவல்நிலையத்தில் அதிரடி பஞ்சாயத்து!!

காதலிக்கு அடித்துக்கொண்ட இரு காதலர்கள்! காவல்நிலையத்தில் அதிரடி பஞ்சாயத்து!!
 | 

ஒரே நேரத்தில் இரு ஆண்களைக் காதலித்த கல்லூரி மாணவி!! காவல் நிலையத்தை அதிர வைத்த பஞ்சாயத்து!!!

ஒரு பெண்ணுக்காக இரண்டு இளைஞர்கள் அடித்துக்கொண்ட சம்பவம் கன்னியாகுமரி குளச்சல் அருகே நிகழ்ந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே, ராசிபன் என்பவர் கிப்ட் ஷாப் கடை நடத்தி வருகிறார். கடைக்கு அன்றாடம் அங்கு வரும் கல்லூரி மாணவி ஒருவர் மீது இவருக்கு காதல் எழுந்துள்ளது. இந்நிலையில், அந்த பெண்ணிற்காக ராசிபன் தங்க சங்கிலி, மற்றும் பல விதமான கிப்ட்களையும் பரிசாக அள்ளிக் கொடுத்துள்ளார். அவரை பல இடங்களுக்கு அழைத்துச் சென்று பணத்தை தண்ணீராக செலவழித்துள்ளார். இந்நிலையில் அண்மை காலமாக அந்த பெண் ராசிபனிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்.

ஒரே நேரத்தில் இரு ஆண்களைக் காதலித்த கல்லூரி மாணவி!! காவல் நிலையத்தை அதிர வைத்த பஞ்சாயத்து!!!

காதலர் தினத்தன்று கூட அவரிடம் சரியாக பேசவில்லை. இதனால் மனமுடைந்து போன அவர், காதலியின் வீட்டுக்கே சென்றுள்ளார். அப்போது, இரண்டாவது காதலன் நிஜன், என்ற இளைஞருடன் தனிமையில் பேசிக் கொண்டிருந்துள்ளார். இதைக் கண்டு ஆத்திரமடைந்த ராசிபன் காதலியிடன் நியாயம் கேட்டு சண்டையிட, அதற்கு இரண்டாவது காதலன் நிஜனுக்கும், ராசிபனுக்கும் கைகலப்பு ஏற்பட்டு கட்டிப்புரண்டு சண்டையிட்டுள்ளனர். இதையடுத்து பயந்து போன அந்த பெண் இது குறித்து குளச்சல் காவல்துறையில் புகார் அளித்தார். ஒரே நேரத்தில் இரு ஆண்களைக் காதலித்த கல்லூரி மாணவி!! காவல் நிலையத்தை அதிர வைத்த பஞ்சாயத்து!!!

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர்கள். இருவரையும் அழைத்து விசாரணையை நடத்தியுள்ளனர். அப்போது இருவருமே அந்த பெண் ஆஸ்மியை ஒரு தலையாக காதலித்து வந்ததும், அந்த பெண் ராசிபனை ஏமாற்றியதும் தெரிய வந்துள்ளது. ஆனால், அந்த பெண்ணோ, ராசிபன் யார் என்று தனக்கு தெரியாது என்றும் தன்னை அவன் ஒரு தலையாக காதலித்து தொல்லை கொடுப்பதாகவும் கூறி அதிரவைத்துள்ளார். இதைக் கேட்டு கோபத்தின் உச்சிக்கே சென்ற ராசிபன் உடனே காவல் நிலையத்தை விட்டு வெளியேறியுள்ளார்.

ஒரே நேரத்தில் இரு ஆண்களைக் காதலித்த கல்லூரி மாணவி!! காவல் நிலையத்தை அதிர வைத்த பஞ்சாயத்து!!!

சிறிது நேரம் கழித்து, அவன் வாங்கி கொடுத்த தங்க சங்கிலி ஞாபகத்திற்கு வர, அதையாவது திருப்பி வாங்கி கொடுங்கள் என்று முறையிட்டுள்ளார். அதற்கு, காதலியின் வீட்டில் நடந்த சண்டையில் டியூப் லைட்டை ராசிபன் உடைத்து விட்டதாகவும் அதற்கும் அவர் கொடுத்த தங்க சங்கிலிக்கும் சரியாக போய் விட்டது என சிறுபிள்ளைகளுக்கு பஞ்சாயத்து செய்வது போல அந்த பெண்ணின் தரப்பில் கூறியதோடு, வீடு புகுந்து தாக்குதல் நடத்தியதாக ராசிபன் மீது வழக்கு பதியப்படும் என்று எச்சரித்ததால், காவல் துறையினர் நீதிமன்றத்தை அணுகி தீர்வு காணும்படி ராசிபனை அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP