மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி... அதிரடி காட்டிய தாசில்தார்..!

மாற்றுத்திறனாளி தீ குளிக்க முயற்சி... அதிரடி காட்டிய தாசில்தார்..!
 | 

மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி... அதிரடி காட்டிய தாசில்தார்..!

தூத்துக்குடி அருகே மூன்று சக்கர ஸ்கூட்டர் கேட்டு தீக்குளிக்க முயன்ற மாற்றுத்திறனாளிக்கு இலவச வீட்டு மனை பட்டா பசுமை வீடு உள்ளிட்டவற்றையும் சேர்த்து கோவில்பட்டி தாசில்தார் வழங்கியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் வ.உ.சி நகர் 2-ஆவது தெருவைச் சேர்ந்தவர் பத்மநாதன். இவர் நடக்கமுடியாத மாற்றுத்திறனாளி ஆவார். இவர் தனக்கு மூன்று சக்கர ஸ்கூட்டர் வழங்க வேண்டி கடந்த 2018 ஆம் ஆண்டில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். ஆனால் இதுவரை இவருக்கு ஸ்கூட்டர் வழங்கப்படாததால் மனமுடைந்த இவர் நேற்றைய தினம் கோவில்பட்டி தாசில்தார் அலுவலகம் முன் தீக்குளிக்க முயற்சித்துள்ளார். மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி... அதிரடி காட்டிய தாசில்தார்..!இதனை கண்ட அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். மேலும் அவரது உடலில் தண்ணீரை ஊற்றினர். பின் கோவில்பட்டி தாசில்தார்  அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் எனக்கு 21 வயதில் ஏற்பட்ட முளை காய்ச்சலில் கால் மூடம் ஆகி நடக்க முடியாமல் போனது. என் மனைவிதான் கூலி வேலைக்கு சென்று வீட்டையும் குடும்பத்தையும் பராமரித்து வருகிறார். மேலும் தனது குடும்பம் வறுமையில் வாடுவதால், தானும் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற நிலை உள்ளது. எனவே, எனக்கு மூன்று சக்கர ஸ்கூட்டர் இருந்தால் நானும் கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றுவேன். அதனால் எனக்கு அதனை வழங்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். இவரது பேச்சைக் கேட்ட தாசில்தார் அவருக்கு மூன்று சக்கர ஸ்கூட்டர் உடன் இலவச வீட்டுமனைப்பட்டா, பசுமை வீடு உள்ளிட்டவற்றையும் சேர்த்து வழங்க உத்தரவிட்டார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP