டன் கணக்கில் முடங்கி கிடக்கும் சின்ன வெங்காயம்! தமிழக அரசின் அலட்சியம்!

டன் கணக்கில் முடங்கி கிடக்கும் சின்ன வெங்காயம்! தமிழக அரசின் அலட்சியம்!
 | 

டன் கணக்கில் முடங்கி கிடக்கும் சின்ன வெங்காயம்! தமிழக அரசின் அலட்சியம்!

தமிழகத்தில் வெங்காயத்தின் விலை கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து ஏறிக் கொண்டிருக்கும் நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் சின்ன வெங்காயம் அதிகளவில் முடங்கிக் கிடக்கிறது. ஒவ்வொரு வருடமும் பெரம்பலூரில் 9 ஆயிரம் ஹெக்டேர்கள் வரையில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தின் மொத்த சின்ன வெங்காய உற்பத்தியில் 23 சதவீத வெங்காயம் பெரம்பலூரில் தான் உற்பத்தியாகிறது. 

தற்போது, வெங்காயத்திற்கான விலையை நிர்ணயம் செய்ய முடியாத பரிதாபத்தில் விவசாயிகள் உள்ளனர். இதனால் அறுவடை செய்த சின்ன வெங்காயத்தை உரிய விலை கிடைக்காத காரணத்தால் இந்த மழையிலும் வெங்காயத்தை விளைந்த வயலிலேயே குவியல்களாய் போட்டு வைத்திருக்கும் அவலம் நிகழ்ந்து வருகிறது. 

இப்படி விற்காமல் முடங்கிக் கிடக்கும் வெங்காயம் சமயங்களில் திருடும் போகிறது. பாடாலூர் பகுதியில் பட்டறையில் இருந்து 300 கிலோ மர்ம நபர்களால் திருடுபோனது அதிர்ச்சியளித்த நிலையில், செட்டிக்குளத்தில் மூடிக் கிடக்கும் ஏல மையத்தைத் திறந்து ஏலத்திற்கு விட மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

டன் கணக்கில் முடங்கி கிடக்கும் சின்ன வெங்காயம்! தமிழக அரசின் அலட்சியம்!

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் செல்லதுரை கூறும் போது, உழவர் சந்தைகளில் சின்ன வெங்காயத்தை அதிகப்படியாக விற்பனை செய்ய வாய்ப்புகள் தர வேண்டும். ஆந்திராவை போல் தமிழக அரசே பெரம்பலூர் மாவட்டத்தில் சின்ன வெங்காயத்தை உரிய விலைக்குக் கொள்முதல் செய்து ரேஷன் கடைகளின் மூலமாக மானிய விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP