நள்ளிரவில் சடலத்தையும், 7 மாத கர்ப்பிணியையும் டோலிகட்டி தூக்கி சென்ற மலைகிராம மக்கள்...

திருப்பத்தூரில், சாலை வசதி இல்லாததால் இறந்தவரின் சடலத்தையும், அவரது 7 மாத கர்ப்பிணி மனைவியையும் நள்ளிரவில் டோலிகட்டி தூக்கி சென்ற அவலம் அரங்கேறியுள்ளது.
 | 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் நெக்னாமலை என்னும் மலை கிராமம் உள்ளது. இங்கு 1,500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் சாலை வசதி இல்லாததால் கிராம மக்கள்  தினமும் 7 கிலோ மீட்டர் நடந்து சென்றுதான் அத்தியாவசிய பொருட்கள் வாங்கி வருகின்றனர். 

நள்ளிரவில் சடலத்தையும், 7 மாத கர்ப்பிணியையும் டோலிகட்டி தூக்கி சென்ற மலைகிராம மக்கள்...

இந்நிலையில் கோவை மாவட்டம் சிங்காநல்லூரில் வேலை பார்த்துவந்த இந்த கிராமத்தைச்சேர்ந்த முனுசாமி என்பவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். அவரது சடலத்தை சொந்த ஊர் கொண்டு வந்த நிலையில், சாலை வசதி இல்லாததால் ஆம்புலன்ஸ் வாகனம் மலைஅடிவாரத்தில் நிறுத்தப்பட்டது.  மின்வசதி கூட இல்லாத அந்த இடத்திலேயே சடலம் இறக்கி வைக்கப்பட்டுள்ளது. 

நள்ளிரவில் சடலத்தையும், 7 மாத கர்ப்பிணியையும் டோலிகட்டி தூக்கி சென்ற மலைகிராம மக்கள்...

இதையடுத்து, சைக்கிள் டியூப்களை தீப்பந்தம் போல் எரியவிட்டு அந்த வெளிச்சத்தில் முனுசாமியின் சடலத்தை போர்வையால் டோலி கட்டி கரடு முரடான பாதை வழியாக உறவினர்கள் தூக்கிச் சென்றனர். அதேபோல் முனுசாமியின் 7 மாத கர்ப்பிணி மனைவி வனிதாவையும் டோலிகட்டி தூக்கிச்சென்றனர். சாலை வசதி கேட்டு முறையிட்டும், அதிகாரிகள் கண்டு கொள்ளாததால், இந்த அவலம் அரங்கேறியுள்ளதாக கிராம மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். 

நள்ளிரவில் சடலத்தையும், 7 மாத கர்ப்பிணியையும் டோலிகட்டி தூக்கி சென்ற மலைகிராம மக்கள்...

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP