தமிழகத்தில் திருப்பதி லட்டு! திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு!

திருமலையில் உள்ள திருப்பதி வெங்கடாசலபதியை தரிசிப்பதற்காக உலகம் முழுவதும் இருந்தும் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் தினந்தோறும் திருமலையில் குவிந்து வருகின்றனர். இந்நிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கன்னியாகுமரியில் அமைக்கப்பட்ட வெங்கடாசலபதி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று...
 | 

தமிழகத்தில் திருப்பதி லட்டு! திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு!

திருமலையில் உள்ள திருப்பதி வெங்கடாசலபதியை தரிசிப்பதற்காக உலகம் முழுவதும் இருந்தும் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் தினந்தோறும் திருமலையில் குவிந்து வருகின்றனர். இந்நிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கன்னியாகுமரியில் அமைக்கப்பட்ட வெங்கடாசலபதி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று ஒரு வருடம் முடிவடைந்ததையடுத்து, முதலாமாண்டு வருஷாபிஷேகம் நடைபெற்றது.

தமிழகத்தில் திருப்பதி லட்டு! திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு!

அதையொட்டி, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் உள்ளூர் தகவல் மற்றும் ஆலோசனை மைய தலைவர் சேகர் ரெட்டி அளித்த பேட்டியில், இந்த ஆலயத்திற்கு வரும் அனைத்து பக்தர்களும் திருமலையில் கொடுக்கப்படுவதைப் போன்று லட்டு பிரசாதம் எப்போது வழங்கப்படும் என்று அனைவரும் கேட்கிறார்கள். இது தொடர்பாக, திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் ஆலோசனை நடத்தி உள்ளார். விரைவில் இங்கு வரும் பக்தர்களுக்கு திருமலையில் கொடுக்கப்படுவதைப் போன்று லட்டு பிரசாதமாக வழங்கப்படும். முதல் கட்டமாக இன்னும் 15 நாட்களில் ஒவ்வொரு சனிக்கிழமையும் லட்டு பிரசாதம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP