பேருந்துக்குள் சிறுமி பாலியல் பலாத்காரம்.. காவல் காத்த ஓட்டுநர்.. 3 பேர் கைது..

மத்தியப் பிரதேசத்தில் ஒரு பேருந்தில் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்
 | 

பேருந்துக்குள் சிறுமி பாலியல் பலாத்காரம்.. காவல் காத்த ஓட்டுநர்.. 3 பேர் கைது..

மத்தியப்பிரதேசம், ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள பியோரா நகரில் 15 வயது சிறுமி பேருந்திற்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ராஜ்கர் மாவட்டம் சுதாலியா பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி, கடந்த புதன்கிழமை அன்று இந்தூரில் உள்ள தனது சகோதரர்களை சந்தித்துவிட்டு இரவு பேருந்தில் கிராமத்திற்கு திரும்பியுள்ளார்.  பேருந்தில் சிறுமி மட்டும் இருந்த நிலையில், பேருந்து பியோரா பேருந்து நிலையத்திற்குள் நின்றுள்ளது. 

அப்போது பேருந்து உதவியாளரான ராஜு அஹிர்வார்(19) என்பவர் பேருந்திற்குள் வைத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பேருந்து ஓட்டுநர் கதிர் கான் (25) வாகனத்திற்கு வெளியே காவலில் நின்றதாக கூறப்படுகிறது. இது குறித்து சுதாலியா காவல்நிலையத்தில் சிறுமி வியாழக்கிழமை அதிகாலை 2 மணியளவில் புகார் அளித்தார். 

புகாரின் அடிப்படையில், அஹிர்வார் மற்றும் ஓட்டுநர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில், அஹிர்வார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP