திருப்பாவை-28 கறவைகள் பின்சென்று கானம்சேர்ந்து...

திருப்பாவை-28... எங்கும் நிறைந்திருக்கும் கோவிந்தா, உன்னோடு எங்களுக்கு இருக்கும் பந்தம் என்பது எக்காலத்திலிம் அழியவே அழியாதது. இத்தனை நெருக்கமான குழந்தைகள் என்றெண்ணி எங்களுக்கு முக்தி கொடுத்து அருள்வாயாக!
 | 

திருப்பாவை-28 கறவைகள் பின்சென்று கானம்சேர்ந்து...

காட்டுக்குள்ள ஆடு மாடுகளுக்குப் பின்னே சுத்திட்டிருக்கிற ஆட்கள் நாங்கள். ஐந்தறிவு ஜீவன்களுடன் சுத்திட்டிருப்பதால், அவை மேயும் இடங்களிலேயே நாங்களும் சாப்பிடுகிறோம். அவை குடிக்கும் குளங்களிலேயே நாங்களும் குடிக்கின்றோம். அதனால், சராசரி மனிதனுக்கு இருக்கும் அறிவு ஒன்றும் இல்லாத ஆயர் குலத்து மக்கள் நாங்கள். 

சரணாகதிக்காக முழுமையாக ஆயத்தமாகிய வரிகள் மேற்சொன்னவை.  “உன் படைப்புகளில் உனக்கொன்றும் வேறுபாடு இருக்காது. ஆனால், பசுக்களுக்கு கொடுக்கும் புனிதம் கூட மனிதர்களுக்கு மனிதர்களே கொடுப்பதில்லை. உலகத்தைப் படைத்த உன் முன்னால், எனக்கு என்ன அறிவு இருப்பதாக நான் நினைக்க முடியும்? எங்களுக்கு அறிவே கிடையாது என்ற தீர்க்கமான உண்மையை உணர்ந்த அறிவு மட்டும் தான் இருக்கு” 

குறையொன்றும் இல்லாத கோவிந்தனே! அதாவது எங்கும் நிறைந்துள்ள பரம்பொருளே! உன் ஒரு அவதாரத்தை எங்கள் குலத்தில் கொண்டோம் என்ற பெரும் புண்ணியத்தை நாங்கள் கொண்டிருப்பதைத் தவிர வேறொரு பெருமையும் இல்லை எங்களுக்கு. இதனை ஆயர்குல மக்களாக நின்றும் பார்க்கலாம் அல்லது  இந்த மனிதப் பிறப்பே ஓர் ஆயர்குலம் என்றும், வேறெந்த உயிரினத்திற்கும் கிடைக்காத பாக்கியமான  “கடவுளை உணர்தல்” என்பது இங்கே என் மனதினும் அவதாரம் தரித்ததாகவும் கொள்ளலாம். 

எங்கும் நிறைந்திருக்கும் கோவிந்தா, உன்னோடு எங்களுக்கு இருக்கும் பந்தம் என்பது எக்காலத்திலிம் அழியவே அழியாதது. பரமாத்மா இல்லாத ஜீவாத்மா ஏது என்ற அறிவு இருந்தாலும், உன் மீது கொண்ட அன்பின் மிகுதியால், அடிக்கடி ஒருமையிலும் மரியாதைக் குறைவான சொற்களிலும் அழைத்ததை எல்லாம் மனதில் கோபமாகக் கொள்ளாமல், இத்தனை நெருக்கமான குழந்தைகள் என்றெண்ணி எங்களுக்கு முக்தி கொடுத்து அருள்வாயாக! 

“கறவைகள் பின்சென்று கானம்சேர்ந்து உண்போம்
அறிவுஒன்றும் இல்லாத ஆய்க்குலத்து உந்தன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம்உடையோம்
குறைஒன்றும் இல்லாத கோவிந்தா உந்தன்னோடு
உறவேல் நமக்குஇங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னை
சிறுபேர் அழைத்தனமும் சீறி அருளாதே
இறைவாநீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.”

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP