சந்திர கிரகணத்தினால் அவசியம் பரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரங்கள் இது தான்!

சந்திர கிரகணத்தினால் அவசியம் பரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரங்கள் இது தான்!
 | 

சந்திர கிரகணத்தினால் அவசியம் பரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரங்கள் இது தான்!

புது வருஷத்தின் முதல் சந்திர கிரகணம் இன்று இரவு நிகழ்கிறது. இன்று நிகழ இருக்கும் சந்திர கிரகணத்தை இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் முழுவதும் தெரியும் என்றும், இந்த சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க முடியும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திர கிரகணத்திற்கு ஓநாய் சந்திர கிரகணம் என்று நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் பெயரிட்டுள்ளது.

சந்திர கிரகணத்தினால் அவசியம் பரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரங்கள் இது தான்!

சூரியனிலிருந்து வெளியாகும் ஒளியை சந்திரன் பெறும் போது, சூரியனுக்கும் நிலவுக்கும் நடுவில் பூமி பந்து கடந்து செல்லும் போது, அந்த ஒளி தடைப்படுகிறது. பூமி, சூரியனின் ஒளியைத் தடுப்பதைத் தான் சந்திர கிரகணம் என்கிறோம். 

இன்று இரவு 10.37 மணிக்கு தொடங்கும் இந்த சந்திர கிரகணம், நாளை அதிகாலை 2.42 மணி வரையில், சுமார் 4 மணி நேரம் தொடர்ந்து நீடிக்கும் என்றும், நள்ளிரவு 12.41 மணியளவில் சந்திர கிரகணம் அதன் முழுமையான அளவை எட்டும் என்றும் அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். 

சந்திர கிரகணத்தினால் அவசியம் பரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரங்கள் இது தான்!

இன்றைய சந்திர கிரகணம் நிகழ இருக்கும் நேரமான இரவு 10.37 மணிக்கு புனர் பூசம் நட்சத்திரம் இருப்பதால், புனர் பூசம் நட்சத்திரத்தை உடையவர்களும், அதற்கு முன்பும், பின்பும் இருக்கும் திருவாதிரை, பூசம் உள்ளிட நட்சத்திரத்தை உடையவர்களும் பரிகாரம் செய்துக் கொள்ள வேண்டும். 

மேலும், புனர் பூசம் நட்சத்திரத்திற்கு அதிபதியாக இருக்கும் குரு, விசாகம், பூரட்டாதி நட்சத்திரங்களுக்கும் அதிபதியாக இருக்கிறார். அதனால், புனர்பூசம், திருவாதிரை, பூசம் நட்சத்திரதாரர்களுடன், விசாகம், பூரட்டாதி நட்சத்திரங்களில் பிறந்தவர்கள்  மட்டும் இன்றைய சந்திர கிரகணத்தின் காரணமாக பரிகாரம் செய்தால் போதும். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP