இந்த நாள் வரைக்கும் லீவே கிடையாது...அரசு ஊழியர்களுக்கு ஆப்பு...

மார்ச் -31 வரைக்கும் லீவு கேட்கவே கூடாது என்று ஊழியர்களுக்கு நிபந்தனை விதித்திருக்கிறது தர்மபுரி நகராட்சி.மார்ச் 31 ஆம் தேதிக்குள் 14 கோடி ரூபாய் வரி பாக்கியை வசூலிக்க ஊழியர்களுக்கு நிபந்தனை விதித்துள்ளது. இந்த வசூல் முடியும் வரை அவசியமின்றி அநாவசியமாக யாரும் விடுமுறை எடுக்ககூடாது என்று தெரிவித்திருக்கிறது.
 | 

இந்த நாள் வரைக்கும் லீவே கிடையாது...அரசு ஊழியர்களுக்கு ஆப்பு...

மார்ச் -31 வரைக்கும் லீவு கேட்கவே கூடாது என்று ஊழியர்களுக்கு நிபந்தனை விதித்திருக்கிறது தர்மபுரி நகராட்சி.

தமிழகத்தில் நகராட்சிகள் தங்களது ஆண்டு வருமானத்தை கொண்டு தான் நகராட்சியில் பணிபுரியும்  ஊழியர்களுக்கு சம்பளம், உள்கட்டமைப்பு பணிக்கு என்று செலவிட்டு வருகிறது. 

சமீப வருடங்களாக தர்மபுரி நகராட்சிக்கு 14 கோடி ரூபாய்க்கு மேல் வரி நிலுவை இருந்துவருகிறது. அதிலும் அரசு நிறுவனங்களும் கூட நகராட்சிக்கு உரிய காலத்தில் வரி செலுத்தாமல் போக்கு காட்டி வருவதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கலை சந்தித்து வந்த நகராட்சி அதிரடி முடிவு எடுத்துள்ளது. 

தர்மபுரி பிஎஸ்என்எல் நிறுவனம் 27.66 இலட்சமும், குடிநீர் வரி 17 ஆயிரமும்,  தர்மபுரி நகர காவல் நிலையம், காவலர் குடியிருப்பு, மகளிர் காவல் நிலையம், டிஎஸ்பி அலுவலகம் போன்றவை 5. 5இலட்சமும், குடிநீர் வரி 86 ஆயிரமும் செலுத்தாமல் பாக்கி வைத்திருப்பதாக பட்டியல் நீளுகிறது. 

மார்ச் 31 ஆம் தேதிக்குள் 14 கோடி ரூபாய் வரி பாக்கியை வசூலிக்க ஊழியர்களுக்கு நிபந்தனை விதித்துள்ளது. இந்த வசூல் முடியும் வரை அவசியமின்றி அநாவசியமாக யாரும் விடுமுறை எடுக்ககூடாது என்று தெரிவித்திருக்கிறது. 

 ஒட்டு மொத்த அரசு நிறுவனங்களும் பணியாளர்களிடம் கண்டிப்பு காட்டினால் வேலைகளும் சுணக்கமில்லாமல் இருக்கும்.                                                         

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP