நீட் தேர்வுக்கு விலக்கு கிடையாது! மத்திய அமைச்சர் அதிரடி!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவடைகிறது. இதில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டு வந்த நிலையில், நீட் தேர்வில் இருந்து தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு விலக்கு அளிக்க முடியுமா? என திமுக எம்.பி டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பியிருந்தார்.
 | 

இதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் இன்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில், நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்கும் தமிழகம், புதுச்சேரி அரசுகளின் கோரிக்கைகளை ஏற்க முடியாது என்றும், நாடு முழுவதும் ஒரே முறையில் மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நடத்தப்படுவதால் தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு மட்டும் விலக்களிக்க முடியாது என தெரிவித்துள்ளார். மேலும், இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம் 1956ன் படி அனைத்து மாநிலங்களுக்கும் நீட் தேர்வு பொருந்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP