தமிழக பெண்களிடம் கருமுட்டை திருட்டு! கேரள கருத்தரிப்பு மையங்களின் அட்டூழியம்!

கேரளாவில் பிரபல கருத்தரிப்பு மையம் ஒன்றில் சட்டவிரோதமாக கருமுட்டை சேகரித்து விற்பனை செய்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 | 

கேரளாவில் உள்ள பிரபல கருத்தரிப்பு மையம் ஒன்று சட்ட விரோதமாக, ஏழை, எளிய பெண்களிடம் இருந்து சிறு தொகைக்கு கருமுட்டைகளை சேகரித்து ரூ.30,000 முதல் ரூ.50000 வரை பெரும் தொகைக்கு விற்று வந்துள்ளது. இதற்காக ஒரு ஏஜெண்ட் குழுவும் செயல்பட்டு வந்துள்ளதாக கேரளா ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. 

தமிழக பெண்களிடம் கருமுட்டை திருட்டு! கேரள கருத்தரிப்பு மையங்களின் அட்டூழியம்!

இந்த ஏஜெண்ட் குழு தமிழகம், ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் ஏழை பெண்கள் மற்றும் திருமணமாகாத இளம் பெண்கள், கல்லூரி மாணவிகளிடம் பண ஆசை காட்டியும், ஏமாற்றியும் அழைத்து வந்து,  கருமுட்டைகளை அதிகமாக உருவாக்க வைக்கும் ஹார்மோன்களை செலுத்தி குறிப்பிட்ட தினங்களுக்கு பிறகு மீண்டும் கருதரிப்பு மையத்திற்கு அழைத்து வந்து கருமுட்டைகளை கொடுக்க வைக்கின்றனர். 

கருதரிப்பு மையம் அப்பெண்களின் கருப்பையில் இருந்து கருமுட்டைகளை எடுத்து பதப்படுத்தி வைத்துக்கொள்கின்றனர். பெண்களைக் கொண்டு வரும் ஏஜென்டுகளுக்கு ரூ.5,000 வரை கமிஷனாக அளிக்கப்படுகிறது. கருவுறுவாவதில் பிரச்சனை என கூறி வரும் பெண்களுக்கு இந்த கருமுட்டைகளை செலுத்தி ரூ.30,000 முதல் ரூ.50,000 வரை பெற்று கொள்கின்றனர். 

தமிழக பெண்களிடம் கருமுட்டை திருட்டு! கேரள கருத்தரிப்பு மையங்களின் அட்டூழியம்!

மேலும்,  இந்த சிகிச்சைக்கு வரும் பெண்களிடம், இந்த முயற்சி 100% வெற்றி பெறும் என்று எதிர்பார்க்காதீர்கள் என்றும், ஒரு சிலருக்கு முதல் முறையிலேயே வெற்றி பெற்று விடுகிறது. ஒரு சிலருக்கு 2-3 முறை முயற்சிக்க வேண்டியுள்ளது என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு தொகையை சிகிச்சை மையத்தில் வசூலிக்கின்றனர்.

அது போக அண்டை மாநிலங்களில் இருந்து அழைத்து வரும் பெண்களின் உடலில் செயற்கை ஹார்மோன்கள் செலுத்தப்படுவதால் அவர்கள் உடல் பாதிக்கப்படுவதுடன், அடிக்கடி கருமுட்டை தானம் மேற்கொண்டால் குழந்தை பெறும் தன்மையை இழக்கவும் நேரிடும் என்றும் மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP