அக்காவை விடாமல் தொந்தரவு செய்த இளைஞர்.. தம்பியின் செயலால் அதிர்ந்த குடும்பம்...

அக்காவை விடாமல் தொந்தரவு செய்த இளைஞர்.. தம்பியின் செயலால் அதிர்ந்த குடும்பம்...
 | 

அக்காவை விடாமல் தொந்தரவு செய்த இளைஞர்.. தம்பியின் செயலால் அதிர்ந்த குடும்பம்...

தன் அக்காவை ஒரு தலையாகக் காதலித்த இளைஞரைத் தம்பி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் குமார். இவர் அப்பகுதியில் இருக்கும் ஒரு இளம்பெண்ணை ஒரு தலையாகக் காதலித்து வந்துள்ளார். இதனையறிந்த அந்த பெண்ணின் சகோதரன் மணிகண்டன் என்பவர், தனது சகோதரியின் பின்னால் சுத்துவதை நிறுத்திக்கொள் என தினேஷ் குமாருக்கு பலமுறை எச்சரித்துள்ளார்.

அக்காவை விடாமல் தொந்தரவு செய்த இளைஞர்.. தம்பியின் செயலால் அதிர்ந்த குடும்பம்...

இருப்பினும், தினேஷ் அதனைக் கேட்காமல் அந்த பெண்ணின் பின்னாலேயே தொடர்ந்து செல்வது, பேச முயல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார் என்று கூறப்படுகிறது. தினேஷின் காதலுக்கு அந்த பெண் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், மணிகண்டன் ஒரு நாள் தினேஷை நேரில் சந்தித்து அக்காவைக் காதலிப்பதைக் கைவிடும் படி கூறியுள்ளார்.

அக்காவை விடாமல் தொந்தரவு செய்த இளைஞர்.. தம்பியின் செயலால் அதிர்ந்த குடும்பம்...

அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்படவே ஆத்திரமடைந்த மணிகண்டன், தினேஷ்குமாரைக் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த தினேஷ், அதிக ரத்தம் வெளியேறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக தினேஷ் பெற்றோர் அளித்த புகாரில் மணிகண்டனை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP