இளம்பெண் திடீர் மரணம்! போலீசாரிடம் மறைத்த கணவர்!

மனைவி திடீர் மரணம்.. காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காத கணவருக்கு சிக்கல்.. வரதட்சணைக்காக கொலையா ?
 | 

இளம்பெண் திடீர் மரணம்! போலீசாரிடம் மறைத்த கணவர்!

சென்னை பள்ளிக்கரணையை அடுத்த கோவிலம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஓட்டுநர் ராமகிருஷ்ணன் (30). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பாரதி (24) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. மூன்று மாதத்திற்கு முன்பு இந்தத் தம்பதியினருக்கு ஆண் குழந்தை ஒன்றும் பிறந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் பாரதிக்கு உடல்நிலை சரியில்லை என்று ராமகிருஷ்ணன் ஆட்டோவில் அழைத்துச் சென்று தனியார் மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இளம்பெண் திடீர் மரணம்! போலீசாரிடம் மறைத்த கணவர்!

அங்கு பாரதியை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து மனைவியின் உடலை ராமகிருஷ்ணன் வீட்டுக்கு எடுத்து வந்து வைத்துள்ளார். இதுதொடர்பாக காவல் துறையினருக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல் இருந்துள்ளனர். இந்நிலையில் மகளின் இறப்பை கேட்டு அதிர்ச்சியடைந்த பாரதியின் பெற்றோர், தனது மகளை வரதட்சணை கேட்டு கொடுமை செய்து கொன்று விட்டதாகவும், மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

இளம்பெண் திடீர் மரணம்! போலீசாரிடம் மறைத்த கணவர்!

இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் பாரதி உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பாரதி இறப்பை சந்தேக மரணமாக பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முழு விசாரணைக்கு பின்னரே அப்பெண் உடல் நலக்குறைவால் உயிரிழந்தாரா? அல்லது  கணவரால் கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்யப்பட்டாரா? என்பது தெரிய வரும் என காவல் துறையினர் தெரிவித்தனர். போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல், இறந்த மனைவிக்கு இறுதி சடங்கு செய்ய முற்பட்ட விவகாரம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP