மானியமில்லா சமையல் கியாஸ் விலை வரலாறு காணாத வகையில் உயர்வு

சென்னையில் கடந்த மாதம் முழுவதும் மானியமில்லா சிலிண்டர் விலை ரூ.734 ஆக இருந்தது. இந்நிலையில் இன்று சென்னையில் சிலிண்டர் விலை வரலாறு காணாத வகையில் ரூ.147 உயர்த்தப்பட்டு ரூ.881 ஆக உயர்ந்துள்ளது.
 | 

சமையல் கியாஸ் சிலிண்டர்களை ஏழை-எளிய மற்றும் நடுத்தர மக்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு மானிய விலையில் வழங்கி வருகிறது.அதன்படி ஒரு குடும்பத்துக்கு ஆண்டு ஒன்றுக்கு 12 சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது. மானியத் தொகை நுகர்வோரின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது.
ஆண்டுக்கு 12 சிலிண்டருக்கு மேல் பயன்படுத்தினால் மானியம் இல்லாத விலையில் சமையல் கியாஸ் சிலிண்டர்களைப் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு கேஸ் சிலிண்டரின் விலையை மாதம் ஒரு முறை எண்ணெய் விலைக்கு ஏற்ப நிர்ணயம் செய்யப்படுகிறது. 

                                                  மானியமில்லா சமையல் கியாஸ் விலை வரலாறு காணாத வகையில் உயர்வு

இந்நிலையில் சிலிண்டரின் விலை டெல்லி, சென்னை, கொல்கத்தா, மும்பை ஆகிய நகரங்களில் அதிரடியாக  உயர்த்தப்பட்டுள்ளது.டெல்லியில் ஒரு சிலிண்டரின் விலை ரூ.144.50 உயர்த்தப்பட்டு ரூ.858.50 ஆக உள்ளது. சென்னையில் ரூ.147 உயர்த்தப்பட்டு ரூ.881 ஆக உள்ளது.கொல்கத்தாவில் ரூ.149 உயர்த்தப்பட்டு ரூ.896 விலையில், மும்பையில் ரூ.145 உயர்த்தப்பட்டு ரூ.829.5 ஆக உயர்ந்துள்ளது 
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP