கொய்யாப்பழம் பறிக்கச் சென்றதால் விபரீதம் - பறிபோன ஒரு உயிர்!

தங்கராஜ் கொய்யாமரத்தில் பழம் பறித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த சிறுமி ஒருவர் தனக்கும் கொய்யாப்பழம் வேண்டும் என்று கேட்டுள்ளார். இதனனைடுத்து தங்கராஜ் சிறுமிக்காக கொய்யாப்பழம் பறித்து கொடுத்துள்ளார். அப்போது அங்கு வந்த சிறுமியின் தந்தை கருணாகரன், இளைஞரை கடுமையாக திட்டியுள்ளார்.
 | 

கொய்யாப்பழம் பறிக்கச் சென்றதால் விபரீதம் - பறிபோன ஒரு உயிர்!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த மேல் காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த தங்கராஜ் என்ற இளைஞர் கொய்யாப்பழம் பறிக்கச் சென்றதால் ஏற்பட்ட விபரீதம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


தங்கராஜ் கொய்யாமரத்தில் பழம் பறித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த சிறுமி ஒருவர் தனக்கும் கொய்யாப்பழம் வேண்டும் என்று கேட்டுள்ளார். இதனனைடுத்து தங்கராஜ் சிறுமிக்காக கொய்யாப்பழம் பறித்து கொடுத்துள்ளார். அப்போது அங்கு வந்த சிறுமியின் தந்தை கருணாகரன், தங்கராஜ் தன் மகளிடம் காதலை தெரிவிக்கிறார் என்று தவறாக எண்ணிக்கொண்டு இளைஞரை கடுமையாக திட்டியுள்ளார்.


இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான இளைஞர் தங்கராஜ், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தன்னுடைய மரணத்திற்கு கருணாகரனும், அவருடைய மகளும் தான் காரணம் என சுவற்றில் எழுதிவைத்துவிட்டு தூக்கிமாட்டி தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இளைஞரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.


மேலும் இளைஞர் தங்கராஜ் தூக்கிட்டு கொள்ள இதுதான் காரணமா,  அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP