பழைய பழக்கத்தையெல்லாம் விட்டாச்சு! சபரிமலையில் சிம்பு! மனமிறங்கு ஐயப்பா!

27 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் ஐயப்பனை தரிசிக்க சபரிமலை சென்றுள்ளார் நடிகர் சிம்பு..
 | 

பழைய பழக்கத்தையெல்லாம் விட்டாச்சு! சபரிமலையில் சிம்பு! மனமிறங்கு ஐயப்பா!

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு நடிக்கவிருந்த மாநாடு படம் கை விடப்பட்டதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. ’மாநாடு’ படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. படம் தொடர்பான அனைத்துப் பணிகளுமே முடிவடைந்த நிலையில், சிம்புவின் கால்ஷீட் தேதிகளுக்காகக் காத்திருந்தது படக்குழு. ஆனால், சிம்புவுக்கும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், நடிகர் சிம்புவுக்குப் பதிலாக வேறொருவர் நடிப்பார் என்று படக்குழு அறிவித்தது.

பழைய பழக்கத்தையெல்லாம் விட்டாச்சு! சபரிமலையில் சிம்பு! மனமிறங்கு ஐயப்பா!

இதனிடையே சிம்புவையும் சுரேஷ் காமாட்சியையும் சமரசம் செய்யும் முயற்சிகள் நீண்ட நாட்களாக நடைப்பெற்றன. அந்த முயற்சி தற்போது பலனளித்ததையடுத்து  ’மாநாடு’ படத்தில் நடிக்க மீண்டும் ஒப்புக் கொண்டார் சிம்பு. மாநாடு பட வேலைகள் சுமூகமாக முடிந்தால், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வருவதாக சிம்பு ஏற்கனவே வேண்டியிருந்தாராம்.

பழைய பழக்கத்தையெல்லாம் விட்டாச்சு! சபரிமலையில் சிம்பு! மனமிறங்கு ஐயப்பா!

இதையடுத்து, ஐயப்பன் கோயிலுக்கு கடந்த 6ஆம் தேதி மாலை அணிந்து, 40 நாட்களுக்கு தொடர்ச்சியாக விரதம் இருந்து ஐயப்பன் கோவிலுக்குச் செல்ல முடிவெடுத்திருந்தார். அதன்படி நேற்று மாலை தனது சபரிமலை செல்லும் ஆன்மீக பயணத்தை தொடங்கினார். ஜயப்பன் கோவிலில் தரிசனம் முடித்து திரும்புவதற்கு பத்து நாட்களாகும் என அவரது தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், நடிகர் சிம்பு தலையில் இருமுடி கட்டிக்கொண்டு சபரிமலைக்கு புறப்பட்டு செல்லும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. இதை தொடர்ந்து சபரிமலையில் சிம்பு சுவாமி தரிசனம் செய்யும் புகைப்படங்கள் தற்போது வைராகி வருகிறது. 

பழைய பழக்கத்தையெல்லாம் விட்டாச்சு! சபரிமலையில் சிம்பு! மனமிறங்கு ஐயப்பா!

நடிகர் சிம்பு இதற்கு முன் 1992-ல், ’எங்க வீட்டு வேலன்’ படம் சிறப்பாக வந்த காலகட்டத்தில், மாலை போட்டு விரதம் இருந்து ஐயப்பன் கோவிலுக்கு சென்று வந்தார். தற்போது 27 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் ஐயப்பனை தரிசிக்க சபரிமலை சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP