ஹைதராபாத்தில் அடுத்த கொடூரம்! 18 வயசுப் பொண்ணை கற்பழித்த ஆட்டோ டிரைவர்!

ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அதே பகுதிக்கு அருகில் 18 வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 | 

ஹைதராபாத்தின் சந்திரயங்குட்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 18 வயது சிறுமி ஒருவர் கடந்த டிச.8 ஆம் தேதி அவரது 10 வயது தங்கையுடன் வீடு திரும்பியுள்ளார். அப்போது, ஒரு ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர் அவர்களுக்கு உதவி செய்வதாகவும், அவர்களை வீட்டில் விட்டு விடுவதாகவும் கூறி ரிக்ஷாவில் ஏற்றியுள்ளார். ஆனால், வீட்டிற்கு செல்லாமல், நாம் பள்ளி பகுதியில் உள்ள ஒரு லாட்ஜ்க்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அவரது தங்கை தூங்கிய பிறகு, அந்த 18 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

பின்னர் மறுநாள் காலையில் ஃபலக்னுமா ரயில் நிலையம் அருகே இறக்கிவிட்டு சென்றுள்ளார். இது குறித்து அந்த சிறுமி பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து, பெற்றோர் தனது மகளை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் காவல்துறையினர் அந்த ஓட்டுநரை தேடி வருகின்றனர். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP