சென்னையின் அடையாளமாகவே மாறிய மார்கழி இசை விழா

மியூஸிக் அகாடமியின் ஆதரவாளர்களாக இருந்தவர்களில் பலரும் வழக்குரைஞராக பணியாற்றினர். மார்கழி மாதமான டிசம்பர் மாத இறுதியில் அவர்களுக்கு விடுமுறைக் காலமாக இருந்ததால் அச்சமயம் இசை நிகழ்வுகளை நடத்த ஏற்பாடு செய்தனர்.
 | 

சென்னையின் அடையாளமாகவே மாறிய மார்கழி இசை விழா

ஒவ்வொரு விழாக்களும் ஒரு வகையில் முக்கியத்துவம் பெற்றிருக்கும்.  குறிப்பிட்ட சிறப்பு கொண்டவை,ஊர் முழுக்க பேசப்படும். சில விழாக்கள் உலகம் முழுக்க கவனிக்கப்படும். பிரேசிலில்- ரியோடி ஜெனிரோவில் கொண்டாடப்படும் 5 நாள் விழா மிகவும் பிரபலமானவை. அமெரிக்காவில் லூசியாணாமாகாணத்தில் நியூ ஆர்லியன்ஸ் -ல் நடைபெறும் நியூ ஆர்லியன்ஸ் & ஹெரிடேஜ் விழா பழமைமிக்க ஆனால் புகழ்மிக்க விழா. இதேப்போல் இந்தியாவில் தமிழ்நாட்டில் அதன் தலைநகர் சென்னையில் நடைபெறும் மார்கழி இசைவிழா நீண்ட நாட்கள் கொண்டாடப்பட்டு உலகம் முழுக்க இருக்கும் மக்களை ஈர்க்கும் பெருவிழாவாக உள்ளது.

தினம் தினம் கேட்டாலும் தெவிட்டாத பாடல்களும், இனிமையான குரல்களும் நம்மை மார்கழி உற்சவத்திலேயே நிறுத்திவைக்கும். 1900 வருடங்களுக்கு முன்பே சபாக்கள் முளைத்திருந்தன. அவற்றில் நடைபெற வேண்டிய நிகழ்ச்சிகள் ஒழுங்குபடுத்தாமல், உரிய வரைமுறைப்படுத்தாமல் இருந்தது. மியூஸிக் அகாடமியின் ஆதரவாளர்களாக இருந்தவர்களில் பலரும் வழக்குரைஞராக பணியாற்றினர். மார்கழி மாதமான டிசம்பர் மாத இறுதியில் அவர்களுக்கு விடுமுறைக் காலமாக இருந்ததால் அச்சமயம் இசை நிகழ்வுகளை நடத்த ஏற்பாடு செய்தனர். இது தொடர்ந்த நிலையிலேயே சென்னை இசை விழா டிசம்பர் மாத இறுதியில் நடைபெற முக்கிய காரணங்களில் ஒன்றாக இருந்தது என்றும் சொல்லப்படுகிறது.

இப்படித் தொடங்கிய விழா இன்று சென்னையின் அடையாளத்தைக் குறிக்கும் முக்கியமான ஒரு விழாவாக பார்க்கப்படுகிறது. இந்த இசைவிழா நமது முக்கிய கலாச்சார அடையாளங்களில் ஒன்றாகவே திகழ்கிறது. இந்த இசைவிழாவை ஒரு சமதர்ம உற்சவம் என்று சொல்லலாம். மதம் அல்லது பாரம்பரிய விழா போல் அல்லாமல் நடைபெறும். ஏறத்தாழ 100 சபாக்களில் 500 க்கும் அதிகமான  கர்நாடக இசைக்கலைஞர்கள் தங்களது இனிய குரல்களாலும், இனிய இசையை மீட்டும்  தங்கள் விரல்களாலும் இசை அமிர்த்தத்தைச் சாரலாக பொழிகிறார்கள். கடுங் குளிரிலும் இந்த இசைச் சாறலில் நனைய வெளிநாட்டிலிருந்து அதிகம் பேர் இங்கு வருகிறார்கள்.

இசை ரசிகர்களின் விருப்பத்துக்கிணங்க சபாக்கள் (இலவசமாகவும், கட்டணத்துடனும்)காலை 11 மணிக்கே கச்சேரிகளைத் தொடங்குகின்றன. இரவு 10 மணிவரை நீளும் இக்கச்சேரிகளை இடைவிடாமல் ரசிகர்கள் கவனிக்கும் விதத்தில் ஹரிகதை, வாத்தியம், வாய்ப்பாடு, பரதம், கதக், குச்சிபுடி, மோகினி நடனங்கள் என கர்நாடக இசையின் அனைத்து இசைவடிவங்களும் ரசிகர்களுக்கு உரித்த வகையில் இசை விருந்தாக்கப்படுகின்றன. இவற்றில் இந்துஸ்தானி இசை நிகழ்வுகளும் உண்டு. நாடகங்களும், இசை ஆராய்ச்சிக்குரிய விவாதங்களும் இந்த இசை விழாவில் அடக்கம்.

மூத்த கலைஞர்கள் தங்களது சிஷ்யர்களை கச்சேரிகளின் நடுவில் பாடவைப்பார்கள். இவர்களுக்காக மதியக்கச்சேரி அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது இசைவிழாவின் முக்கிய அம்சங்களில் இதுவும் ஒன்றாக உள்ளது. வளரும் கலைஞர்கள் அறிமுகமாகும் களமாக இந்த மதியக் கச்சேரி திகழ்கிறது. கடுங் குளிர் இல்லாமல்.. ஆன்மிகப் பணியும் செய்யாமல் மார்கழி மாதம் பூர்த்தியாகாது.அதுபோலவே இசை ரசிகர்களுக்கு மார்கழி உற்சவத்தைக் காணாமல் மார்கழி பூர்த்தியாகாது. சென்னைக்கு அடையாளமாகவே மார்கழி மாறிவிட்டது இசைவிழா எனலாம்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP